பந்திங் பெரிய சந்தையில் ஆட்டிறைச்சி விலை ஏற்றமா? பயனீட்டாளர்கள் அதிருப்தி

0

இங்கு,பந்திங் பெரிய சந்தையில் நேற்று முதல் ஆட்டிறைச்சி விலை ஏற்றம் கண்டுள்ளதால் பயனீட்டாளர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

இந்தச்சந்தையில், வழக்கம் போல ஆஸ் திரேலியா ஆட்டி
றைச்சி கிலோ ஒன்றுக்கு
வெ28 ஆக விற்கப்பட் டுவந்தது. இப்போது அதன் விலை 34 வெள்ளியாக உயர்வு கண்டுள்ளது என சிலர் தமிழ்மலரிடம் தெரி வித்தனர்.

இது தொடர்பாக, அங்கு ஆட்டிறைச்சி வியாபாரம்செய்து வரும் பொ.பன்னீர் செல்வம் என்பவரை நேரில் சந்தித்து விவரங்களைச் சேகரித்தோம். நாங்கள், இதுவரை வழக்கமான விலையில்தான் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஆட்டிறைச்சி விற்பனை செய்து வந்தோம்.

ஆனால், நாங்கள் இதைத்தருவிக்கும் கிள்ளான் வட்டார மொத்த வியாபாரிகள், இப்போது ஆட்டிறைச்சியை மேலும் வெ.6 கூடுதலாக விலை உயர்த்தியுள்ளனர்.

அதனால், நாங்கள் வழக்கமான விலையில் ஆட்டிறைச்சி விற்பனை தொடர்ந்து செய்ய இய லாது. அப்படி செய்தால், எங்கள் வியாபாரம் பெரிதும் பாதிக்கக் கூடும். அதனால், எதிர்பார்த்த வருமானமும் கிட்டாமல் போகும் என அவர் கூறினார்.
வாணிபத்துறை அமைச்சின் அமலாக் கப்பிரிவு அதிகாரிகளும், மாநில பயனீட்டாளர் சங்கத்தின் பிரதிநிதிகளும் இப்பிரச்சினைக்கு தீர்வு காண உடனடி நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டுமென பன்னீர் செல்வம் கேட்டுக் கொண்டார். இது குறித்து திருப்தியடையாத வட்டார பொதுமக்கள் சம்மந்தப் பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கலாம் என அவர் ஆலோசனை விடுத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

thirteen − 7 =