பந்தாய் பெர்சே கடற்கரையில் எம்சிஓ விதிமுறையை மீறிய 120 பேருக்கு அபராதம்

பட்டர்வொர்த்,பந்தாய் பெர்சே பகுதியில் உல்லாசமாக பொழுதை கழித்துக் கொண்டிருந்த 120 பேருக்கு வடக்கு-செபெராங் பிறை மாவட்ட காவல் துறையினர் எம்சிஓ கட்டுப்பாட்டை மீறிய குற்றத்திற்காக வெ.1,000 அபராதம் விதித்தனர்.
நேற்று முன்தினம் மாலை 6.00 மணி முதல் இரவு 7.45 மணி வரை காவல் துறையினர் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் அப்பகுதியில் உள்ள கடற்கரையில் சமூக இடை வெளியைக் கடைப்பிடிக்காதது, முகக்கவசம் அணியாமல் இருந்த குற்றத்திற்காக 120 பேருக்கு தலா வெ.1,000 அபராதம் விதித்ததாக வடக்கு செபெராங் பிறை காவல் துறை தலைவர் துணை ஆணையர் நோர் சைனி முகமட் நோர் செய்தியாளர்களிடம் கூறினார்.வடக்கு செபெராங் பிறை மற்றும் செபெராங் பிறை மாநகர் மன்ற அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் இணைந்து எம்சிஓ கட்டுப்பாட்டு விதி முறைகளுக்கான சோதனையை அந்த கடற்கரைப் பகுதியில் நடத்தியதாக அவர் தெரிவித்தார்.மேலும் கடற்கரை பகுதிக்கு வருகை தரும் பொது மக்களின் சில இடங்கள் அடையாளம் காணப்பட்டு அப்பகுதிகளை மூட உத்தரவு பிறப்பிக் கப்பட்டுள்ளது என்பதையும் நோர் சைனி முகமட் நோர் சுட்டிக்காட்டினார்.இதற்கிடையில் இப்பகுதியில் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த 5 கடைகளுக்கு வியாபார உரிமம் இல்லாத காரணத்தால் செபெராங் பிறை மாநகர் மன்றம் கடை உரிமை யாளர்களுக்கு அபராதம் விதித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × 2 =