பத்தே நிமிடங்களில் சுங்காய் செல்வதற்கு 120 நிமிடங்கள் காத்திருக்கும் பஸ் பயணிகள்

0

இங்குள்ள என்றா கம்பத்து மக்கள் 4 கிலோ மீட்டர் தூரம் உள்ள சுங்காய் சிற்றூருக்கு பஸ் மூலம் செல்வதற்கு குறைந்த பட்சம் 2 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது.
தஞ்சோங் மாலிம் நகரிலிருந்து வரும் பேருந்துக்காக இங்குள்ள நிழற் குடையில் காத்திருக்கிறார்கள். அக்கம்பத்தில் குடியிருக்கும் வசந்தா காடன், கீர்த்திகா சுப்ரமணியம், ஜெயதேவி காடன் மற்றும் சுப்பம்மாள் அழகன் ஆகியோர் இவ்விவகாரத்தில் கண்டனக் குரல் எழுப்பியுள்ளனர்.
தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான அந்த பேருந்து தஞ்சோங் மாலிம் நகரிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு பீடோர் வரை செல்கின்றது.
மோட்டார் சைக்கிள் வாகனம் வைத்திருக்கும் பலர் பேருந்துக்காக காத்திருக்க வேண்டியதில்லை. ஆனால், எங்களைப் போன்றவர்கள் பேருந்தை நம்பித்தான் இருக்கிறோம் என அவர்கள் கூறினர்.
ஈப்போ, காஜாங், கிள்ளான், கோலசிலாங்கூர், செலாயாங் போன்ற ஊர்களில் வசிக்கும் பொது மக்களுக்காக மாநில அரசு இலவச பஸ் சேவையை வழங்கி வருகிறது. இலவசமாக இருந்தாலும், குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்திற்கு பயணிகளை கொண்டுச் சேர்ப்பதால், மக்கள் நேரத்தோடு பணியில் ஈடுபடுகின்றனர் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
இங்கு பணம் செலுத் தினாலும் குறிப்பிட்ட நேரத்தில், சேர வேண்டிய இடத்திற்கு சேர முடியாமல் அவதிப்படுகிறோம். காலம் கடந்து வரும் பஸ்ஸில் பயணிக்கும் மக்களின் பிரச்சினைக்கு போக்குவரத்து அமைச்சர் விரைந்து தீர்வு காணவேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty + 19 =