பத்து பகாட்டில் வெள்ளப் பிரச்சினை

ஜொகூர் மாநிலத்தின் பத்து பகாட்டில் அடிக்கடி ஏற்பட்டுவரும் வெள்ளப் பிரச்சினைக்குத் தீர்வாக மாநில அரசு ஆக்ககரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அம்மாவட்டத்தில் சுங்கை பத்து பகாட் ஆற்றுக்கு அருகில் உள்ள பிரதான சாலைகளில் வெள்ளம் ஏறுகிறது. அச்சாலைகளின் அருகே ஓடும் வடிகால்களால் போதுமான தண்ணீரை வெளியேற்ற முடியாத நிலை உள்ளது. இதனால் கனத்த மழையின்போது வடிகால்களில் பெருக்கெடுத்தோடும் வெள்ளம் அருகில் சாலைகளை மூழ்கடிக்கிறது. அப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான வழிவகைகளை மாநில அரசு அடையாளம் கண்டு அதனை அமல்படுத்தி வருகிறது என்று ஜொகூர் மாநில சட்டமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty − 18 =