பத்து காஜா சுப்பிரமணியர் கோயில் விவகாரம்: கோயில் தலைவர் உண்மையைக் கூற வேண்டும்

0
OLYMPUS DIGITAL CAMERA

பத்து காஜா, ஆக. 17-
பத்து காஜா சுப்பிரமணியர் கோயில் நகைகள் தொடர்பாக அதன் தலைவர் டாக்டர் சுப்பிரமணியம் தமிழ்ப் பத்திரிகை ஒன்றில் வெளியிட்டுள்ள அறிக்கை உண்மையை திசை திருப்பும் வகையில் உள்ளதாக ஆலய உறுப்பினர் சிவகுமார் குமாரசாமி கூறினார்.
சுவாமியின் நகைகள் நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாமல் இருந்து வந்தன. பங்குனி உத்திர திருநாள் காலங்களில் சுவாமிக்கு போலி நகைகள் சார்த்தப்பட்டது. அதற்கு காரணம் பாதுகாப்பு பெட்டகத்தை திறக்க முடியவில்லை. நகைகளை எடுக்க முடியவில்லை என்று நீண்ட நாட்களாகவே ஆலயத் தலைவர் கூறி வந்தார் என்பது ஆலயப் பொறுப்பாளர்கள் அனைவரும் அறிந்த ஒன்று.
இது தொடர்பாக ஆண்டுக் கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டது. கடந்த ஜூலை மாதம் 28ஆம் தேதி நடந்த ஆண்டுக் கூட்டத்தில் 2 ஆயிரம் வெள்ளி செலவிட்டும் அந்த பெட்டகத்தை திறக்க முடியவில்லை என்று கோயில் தலைவர் கூறியது இங்கு குறிப்பிடத்தக்கது. அதனால் தான் இது குறித்து நான் கடந்த ஜூலை மாதம் 30ஆம் தேதி போலீஸில் புகார் செய்திருந்தேன். புகார் செய்த மறுநாளே பெட்டகத்தை திறந்துவிட்டதாகவும் நகைகள் பத்திரமாக இருக்கின்றன என்றும் ஆலயத் தலைவர் பத்திரிகை வாயிலாக செய்தி வெளியிட்டுள்ளார்.
போலீஸ் புகாருக்குப் பிறகு பாதுகாப்பு பெட்டகத்தை இலகுவாக திறக்க முடிந்தது என்றால், ஏன் இது நாள் வரை பெட்டகத்தை திறக்க முடியவில்லை என்று சிவகுமார் வினவினார்.
ஆகவே எனது போலீஸ் புகார்தான் பாதுகாப்பு பெட்டகத்தை திறக்க வழி வகுத்துள்ளது எனவும் அவர் கூறினார்.
தங்க நகைகள் மாயமாய் போனது போல் உண்மையற்ற தகவல் கூறப்பட்டுள்ளது என்று ஆலயத் தலைவர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், கோவில் நகைகளை காணவில்லை, மாயமாய் போய்விட்டது என்று யாரும் கூறவில்லை. சுவாமியின் தங்க நகைகள் இருக்கின்றபோது ஏன் பெட்டகத்தை திறக்க முடியவில்லை என்று போலி நகைகள் சார்த்தப்படுகிறது என்பதுதான் இங்கே கேள்வியாக உள்ளது.
இதற்கிடையே, போலீஸ் முன்னிலையில் நிபுணரை கொண்டு பூட்டு திறக்கப்பட்டது என்றும் தங்க நகைகளின் எடையை உறுதி செய்ய பாசாக் கடைக்கு போலீஸாருடன் சென்றதாக கோயில் தலைவர் கூறியுள்ளார். பாசாக் கடைக்கு அருகிலேயே அவ்வட்டாரத்தில் பிரபலமான இரண்டு நகைக் கடைகள் உள்ளன. ஆகவே, நகைகளை எடை போடவும் அது அசலா அல்லது போலியா என்பதை உறுதி செய்யவும் நகைக் கடைக்கு கொண்டுச் செல்லாமல் பாசாக் கடைக்கு கொண்டுச் சென்றது ஏன் என்று அவர் வினவினார்?
போலீஸ் உத்தரவுடன் பாசாக் கடைக்குச் சென்றதாகவும் அவர் கூறியுள்ளார். போலீஸார் நகைகள் இருக்கும் இடத்தில் நகைகளை உறுதி செய்யாமல், பாசாக் கடைக்கு கொண்டுச் சென்று உறுதி செய்ய உத்தரவிட்டனர் என்பதை படிக்கும்போது ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை.
மேலும், பெட்டகத்தை திறக்க 2,000 வெள்ளி செலவிட்டதாக ஆண்டுக் கூட்டத்தில் கூறப்பட்டது. ஆனால், ஆலயத் தலைவரின் பத்திரிகை அறிக்கையில் 3,000 வெள்ளி செலவு செய்ததாக அவர் கூறியுள்ளார். இந்த முரண்பாடு ஏன் எனவும் அவர் வினவினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 + 10 =