பத்துமலை திருத்தலம் எதிரில் மலாய் மாதுவுக்கு திடீர் பிரசவம் இந்தியப் பெண்கள் உதவி


நேற்று முன்தினம் (18.1.2022 ) முருகப் பெருமானின் தரிசனம் காண நாடு தழுவிய அளவில் இருக்கும் இந்து ஆலயங்களில் அரசின் எஸ்ஓபியைக் கடைப்பிடித்து சமூக இடைவெளி யை அனுசரித்து பக்தர்கள் வழிபாடு களில் கலந்து கொண்டனர். கூட்ட நெரிசல் இல்லாத குதூகலம் இல்லாத ஒரு திருவிழாவாக தைப்பூசம் எளிமையாக நடைபெற்ற து.
பக்தர்கள் பால்குடம் ஏந்தி அவர்களின் நேர்த்திக் கடன்களைச் செலுத்திய காட்சிகள் மட்டுமே இங்கே காண முடிந்தது.இந்த நிலையில் பத்துமலை நுழை வாயில் எதிர்ப்புறம் மேம்பாலத்திற்கு அடியில் தனது கணவருடன் காரில் அமர்ந்த வண்ணம் பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்த மலாய் பெண்மணிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட அவர் அலறித் துடித்தார்.
இந்தியப் பெண்கள் சிலர் தங்கள் வசம் இருந்த மஞ்சள் துணியை கொண்டு வந்து அந்தக் காரின் கண்ணாடியை மறைத்து அவருக்கு உதவினர். சற்று நேரத்தில் அந்தப் பெண்ணுக்கு சுகப் பிரசவம் ஏற்பட்டது. பெண் குழந்தை பிறந்ததாகச் சொல்லப்பட்டது. மருத்துவமனைக்கும் தகவல் தெரிவிக்கப் பட்டது. தாதியர்கள் மருத்துவ உதவியாளர்கள் அங்கு விரைந்த னர். இந்த ச் சம்பவம் சுமூகமாக அங்கு கையாளப்பட்டது.
அந்தப் பெண்ணின் கணவர் மிகவும் நெகிழ்ச்சியடைந்து தனது மனைவியின் சுகப் பிரசவத்திற்கு உதவி செய்த இந்தியப் பெண்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துச் சென்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × 4 =