பத்துமலை சம்பவம்: 2 ஆடவர்கள் கைது

பத்துமலையில் குடிநுழைவுத் துறை அதிகாரிகள் கடந்த வெள்ளியன்று நடவடிக்கை மேற் கொண்டபோது சில ஆடவர்கள் இடையூறு செய்தது தொடர்பில் காவல் துறையினர் இருவரை கைது செய்துள்ளனர். 47 வயதான முதலாவது ஆடவர் நேற்று முன்தினம் இரவு மணி 7.00க்கு பத்து மலையில் கைது செய்யப்பட்டார். 56 வயதான மற்றொரு நபர் அதே இடத்தில் நள்ளிரவு மணி 12.30க்கு கைது செய்யப்பட்டார்.விசாரணைக்காக அந்த ஆடவர்கள் மூன்று நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று கோம்பாக் மாவட்ட காவல்துறை தலைவர் உதவி கமிஷனர் அரிஃபாய் தாராவே கூறினார்.
இவ்விவகாரம் குறித்து காவல் துறையினர் 3 புகார்களை பெற் றுள்ளனர். அவற்றில் இரண்டு புகார்கள் மலேசிய குடிநுழைவு இலாகாவால் செய்யப்பட்டன. மற்ற புகாரை பத்து மலையிலுள்ள வணிகர்கள் செய்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை யன்று இரவு மணி 10.30க்கு பத்து மலையிலுள்ள சில அங்காடி கடைகள் மீது 80 குடிநுழைவுத் துறை அதிகாரிகள் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்ட னர். பல அங்காடிக்கடைகளில் அந்நிய நாட்டவர்கள் வர்த்தகம் புரிந்து வந்ததாக தகவல்கள் கிடைத்தன. இந்த வணிகர்களை கைது செய்ய முயன்ற குடிநுழை வுத்துறை அதிகாரிகள் தடுக்கப் பட்டனர்.
இவ்விவகாரத்தை தமது இலாகா கடுமையாக கருதுவ தாக மலேசிய குடிநுழைவு இலாகாவின் தலைமை இயக்குநர் டத்தோ கைருல் டிஸாய்மி டாவுட் கூறினார்.
அரசு ஊழியர்கள் தங்கள் கடமையை செய்ய விடாமல் தடுத்ததற்காக சம்பவம் குறித்து குற்றவியல் சட்டம் பிரிவு 1861506இன் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × three =