பத்துகேவ்ஸ் இந்தியன் செட்டில்மென்ட் பகுதியின் சாலைகள் சீரமைக்கப்படும்

எனது தொகுதிக்கு உட்பட்ட பத்துகேவ்ஸ் இந்தியன் செட்டில்மென்ட் பகுதியின் சாலைகள் சீரமைக்கப்படும் என்று சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
பத்துகேவ்ஸ் சட்டமன்றத் தொகுதியில் எனது வெற்றிக்கு பக்கபலமாக இந்தியன் செட்டில்மென்ட் வாக்காளர்கள் இருக்கிறார்கள்.
இந்தியன் செட்டில்மென்ட் குடியிருப்பாளர்கள் சங்கத் தலைவர் வி.எஸ்.மணியம் எப்போதும் இங்குள்ள மக்களுக்கு அயராது உழைத்துக் கொண்டிருக்கிறார்.
50 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து கொண்டிருக்கும் இங்குள்ள மக்களுக்கு சிலாங்கூர் அரசாங்கத்தின் சார்பில் நிலப்பட்டா வழங்கப் பட்டுள்ளது. மிக விரைவில் இந்தியன் செட்டில்மென்ட் பகுதி முழுவதும் சாலைகள் சீரமைக்கப்படும் என்று மந்திரி பெசார் கூறினார்.
தங்கள் குடியிருப்புப் பகுதியைச் சுத்தமாக வைத்திருக்கும்படி கேட்டுக் கொண்ட அவர், டிங்கி அபாயம் குறித்தும் எச்சரித்தார்.
இந்தியன் செட்டில்மென்ட் பகுதியில் துப்புரவுப் பணியை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்த அவர், தனது முயற்சியால் 121 இந்தியர்களுக்கு நிலப்பட்டா வழங்கியதை அவர் நினைவுகூர்ந்தார்.
இங்குள்ள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினையை அவரது கவனத்திற்குக் கொண்டு வரும் வி.எஸ்.மணியத்தையும் அவர் பாராட்டினார்.
சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் பதவியேற்ற பின்னர், இங்குள்ள மக்களுக்கு நிலப்பட்டா வழங்கிய அமிருடின் ஷாரிக்கு மக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 + 4 =