பதிவு பெற்ற குழந்தைகள் பராமரிப்பு மையங்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டது

0

தேசிய பொருளாதார மீட்புத் திட்டத்தின் கீழ், அரசாங்கம் வழங்கிய ஒதுக்கீட்டின் மூலம், பதிவுபெற்ற 7,000 குழந்தைகள் பராமரிப்பு மைய உரிமையாளர்கள், 5,000 ரிங்கிட் வரையிலான மானியத்தைப் பெற்று பயனடைவார்கள் என்று எதிர்பார்பார்க்கப்படுகிறது.
ஒரு முறை மட்டுமே வழங்கப்படும் இந்த மானியம், பதிவுபெறாத குழந்தைகள் பராமறிப்பு மையங்கள், சம்பந்தப்பட்ட அமைச்சுடன் பதிந்துகொள்ள ஊக்குவிப்பாக அமையும் என்று மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் டத்தோஸ்ரீ ரீனா முஹமட் ஹருண் தெரிவித்திருக்கிறார்.
இதுவரை, 5,700 குழந்தைகள் பராமறிப்பு மையங்கள் அமைச்சுடன் பதிந்து கொண்டிருக்கின்றன.
எனினும், நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு, பிகேபே அமல்படுத்தப்பட்டது முதல், 5,000 குழந்தைகள் பராமறிப்பு மையங்கள் மூடப்பட்டதால், அதன் உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டனர்.
தற்போது, குறிப்பிட்ட சில தேவையானப் பொருட்களை ஏற்படுத்திக் கொடுப்பது உட்பட சுகாதார அமைச்சும் மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சும் நிர்ணயித்திருக்கும் செயல்பாட்டு தர விதிமுறை, எஸ்.ஓ.பி.-யைப் பின்பற்றி அவை மீண்டும் செயல்பட வேண்டி இருப்பதை அவர் சுட்டிக் காட்டினார்.
குழந்தைகள், தனித்து வாழும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர் மற்றும் சமூகத்தை உட்படுத்தி குறிப்பாக அமைச்சின் இலக்கிடப்பட்ட குழுவிற்கு தொடங்கப்பட்ட ஞநுசூதுஹசூஹ திட்டம் குறித்து விளக்கமளிக்கும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இத்திட்டத்தின் கீழ், தகுதிபெற்ற மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சின் இலக்கிடப்பட்ட குழுவிற்கு 15 கோடியே 20 லட்சம் ரிங்கிட் ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது.
நிர்ணயிக்கப்பட்ட எஸ்.ஓ.பி.-யை அமல்படுத்துவது மற்றும் பின்பற்றுவதை உறுதிசெய்ய, மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சில் பதிந்துகொண்ட குழந்தைகள் பராமறிப்பு மையங்களுக்கு, டிசம்பர் 31-ஆம் தேதி வரை, ஞநுசூதுஹசூஹ திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்படுவது குறித்து கடந்த ஜூன் 5ஆம் தேதி பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் அறிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 − 11 =