பதின்ம வயதினருக்கானத் தடுப்பூசி விகிதம் உயர்த்தப்பட வேண்டும் சுற்றுலா கலை, பண்பாட்டுத் துறை அமைச்சு

சுற்றுலாவுக்கானத் தொடக்கக் கட்டத் திட்டத்தின் கீழ் தீவுகளுக்கானச் சுற்றுலாத் துறை திறக்கப்பட்டதில் கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 31ஆம் தேதி வரை மலேசியச் சுற்றுப்பயணிகள் 200,000 பேர் லங்காவித் தீவுக்கு வருகைப் புரிவர் என்று இலக்குக் கொள்ளப்பட்டுள்ளதாக சுற்றுலா கலை, பண்பாட்டுத் துறை அமைச்சு தெரிவித்தது. கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டச் சுற்றுலாத் துறையை மீண்டும் உயிர்ப்பிக்க லங்காவி தீவு தொடக்கக்கட்டத் திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது. அங்கு ஊக்கமளிக்கும் வரவேற்புக் கிடைத்ததைத் தொடர்ந்து மலாக்கா, பூலாவ் தியோமான், கெந்திங் மலை ஆகியவை இத்திட்டத்தின் கீழ் திறக்கப்பட்டன. கடந்த ஓராண்டுக்கும் மேலாக உணவகங்கள், ஹோட்டல்கள் மூடப்பட்டு இப்போதுதான் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளதால் சுற்றுலாத் தொழில்துறையினர் இதன் பிறகு நிச்சயம் மகிழ்ச்சியுடன் இருப்பர். இதில் எப்படியிருப்பினும் 18 வயதிற்கும் கீழ்ப்பட்ட பதின்ம வயதினரில் பெரும்பாலானோர் இன்னும் தடுப்பூசிச் செலுத்தாமலும் கோவிட் தொற்று முறியடிக்கப்படாமலும் இருப்பதால் நாம் அதிக நம்பிக்கையுடன் இருக்க முடியாது. இந்த சுற்றுலாத் தலங்களுக்கு தங்களின் சிறு மற்றும் பதின்ம வயதுப் பிள்ளைகளையும் பெற்றோர்கள் அழைத்துச் செல்வதால் அங்குள்ள நிலைமைக் குறித்து அமைச்சுக்கு சந்தேகம் எழுகிறது. முன்னதாக வரும் நவம்பர் மாதத்திற்குள் 12 முதல் 18 வயதிற்குட்பட்டப் பதின்ம வயதினரில் 60 விழுக்காட்டினர் முதல் கட்ட மருந்தளவு தடுப்பூசியைச் செலுத்திக் கொள்வர்; அடுத்தாண்டு ஜனவரிக்குள் 80 விழுக்காட்டினர் 2ம் கட்ட மருந்தளவு தடுப்பூசிகளையும் செலுத்தி விடுவர் என்று சுகாதார அமைச்சு இலக்குக் கொண்டிருந்தது. அதனால் சுற்றுலா உட்படப் பொருளாதாரத் துறைகள் அனைத்தும் மீண்டும் செயல்பட வேண்டுமென்றால் சிறார்கள், பதின்ம வயதினரிடையே கோவிட்டை முறியடிக்கும் முயற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்று ஓர் அறிக்கையில் சுற்றுலா கலை, பண்பாட்டுத் துறை அமைச்சு குறிப்பிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

10 + 3 =