பதவி விலகிய பின்னர் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலிருந்து மகாதீர் பின் வாங்கினார்

0

துன் மகாதீர் பிரதமர் பதவியைத் துறந்த பின்னர், பக்காத்தான் ஹராப்பான் அறிவித்திருந்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்று வதிலிருந்து பின் வாங்கிய தாக முன்னாள் நிதியமைச்சரும் ஜசெகவின் தலைமைச் செயலாளருமான லிம் குவான் எங் தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை மகாதீரை தாம் சந்தித்தபோது, இதனை அவர் தம்மிடம் தெரிவித்ததாக லிம் குவான் எங் குறிப்பிட்டார். பக்காத்தான் ஹராப்பானின் தேர்தல் வாக்குறுதிகளை மேற்கொள்ள மகாதீரின் தலைமைத்து வத்தில் கூட்டணி ஆட்சி அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்ததாக அவர் தெரிவித்தார்.

பிப்ரவரி 25ஆம் தேதி அவரது அலுவலகத்தில் தாம் சந்தித்தபோது, பக்காத்தான் அரசாங்கத் தில் பிரதமராக தாம் நீடிக்க விரும் பவில்லை என்றும் பொதுத்தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தம்மால் முடியாது என்றும் குறிப்பிட்டதாக லிம் தெரிவித்தார்.

அதே வேளையில், அன்வார் இப்ராஹிம், முஹிடின் யாசின், அமாட் ஸாஹிட் ஹமிடி, முகமட் அஸ்மின் அலி ஆகியோர் அவரைச் சந்தித்தனர்.

பக்காத்தான் ஹராப்பானின் உறுப்புக் கட்சிகள் வெவ்வேறு சித்தாந்தக் கொள்கைகளைக் கொண்டிருந்தாலும், பிகேஆர், ஜசெக, அமானா மற்றும் பிரிபூமி பெர்சத்து ஆகிய கட்சிகள் ஒருங்கிணைந்து, 2018ஆம் ஆண்டு அறிவித்த தேர்தல் கொள்கை அறிக்கையின் மூலம்தான் அமோக வெற்றியைப் பெற்றன.

கருத்து வேறுபாடுகள் எழுவது இயல்பானது என்றாலும், தேர்தல் கொள்கைகளை உறுப்புக் கட்சிகள் ஏற்றுக் கொண்டதாக லிம் குவான் எங் குறிப்பிட்டார். இதற்கு முன்னர் டாக்டர் மகாதீரை ஆதரிப்பதாக ஜசெகவும் அமானாவும் தெரிவித்த பின்னர், நேற்று முன்தினம் பக்காத்தான் ஹராப்பான் அன்வார் இப்ராஹிமை பிரதமர் வேட்பாளராக அறிவித்தது.

அதன் பின்னர், மகாதீர் பரிந்துரைத்துள்ள ஒற்றுமை அரசாங்கத்தை பக்காத்தான் ஏற்றுக் கொள்ளவில்லை என ஜசெக அறிவித்தது. ஒற்றுமை அரசாங் கம் பிரதமருக்கு வானளாவிய அதிகாரத்தை வழங்கி, அமைச்சர்களின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் என குறிப்பிட்டது.

மேலும், மகாதீர் தமது நோக்கத் தின்படி, அமைச்சர்களின் கருத்துகளைக் கேட்காமல் எந்த முடிவையும் எடுக்கும் அதிகாரம் கொண்டிருப்பதாகவும், அம்னோ மற்றும் பாஸ் கட்சித் தலைவர்களை அமைச்சரவையில் நியமித்துக் கொள்ளவும் முடியும் என அது குறிப்பிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two + twenty =