பண அரசியலைப் புறக்கணியுங்கள்; வாக்குகளை அடமானம் வைக்காதீர்கள்

சபா மாநில சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்கள் பண அரசியலைப் புறக்கணிக்கும்படி வாரிசான் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ ஷாபி அப்டால் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
ஒவ்வொரு வாக்காளரும் இந்தப் பண அரசியலைப் புறக்கணிக்க வேண்டும். மானமுள்ள வாக்காளர்களாக விளங்க வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் வாக்குகளை அடமானம் வைக்க வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டார்.
200 வெள்ளி அல்லது 300 வெள்ளி கொடுத்து வாக்குகளை விலைபேசுவார்கள். இந்தப் பணத்தைக் கொண்டு வாக்காளர்களால் காரையோ வீட்டையோ வாங்க முடியாது.
எதிர்கால சபா மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு வாக்குகளை அடமானம் வைக்க வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டார்.
சபா மாநில வாக்காளர்களை விலை கொடுத்து வாங்க பேரம் பேசப்படுகிறது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சியைக் கவிழ்க்க சதி நடக்கிறது. ஆகவே சபா மாநில மக்கள் பண அரசியலைப் புறக்கணித்து பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியை வெற்றி பெறச் செய்யும்படி நேற்று நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × four =