பண்டார் சௌஜானா புத்ரா உணவகங்களில் சோதனை

இங்கு பண்டார் சௌஜானா புத்ரா வட்டாரத்தில் உள்ள உணவகங்களில் கோலலங்காட் நகராண்மைக்கழகத்தின் அமலாக்க அதிகாரிகள் அதிரடிச் சோதனை நடத்தினர். இவர்கள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 10 சம்மன்கள் வெளியிடப்பட்டன. நகராண்மைக்கழகம் அனுமதி வழங்கப்படாத இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டு மேசை நாற்காலிகளைப் போட்டு உணவக வியாபாரத்தை நடத்தியது. சாலைகளை மறைத்த வண்ணம் வாடிக்கையாளர்களை அப்பகுதியில் அமர வைத்தது மற்றும் எஸ்ஓபி விதிமுறைகளைக் கடைப் பிடிக்காதது போன்ற குற்றங்களுக்காக உணவக உரிமையாளர்களிடம் சம்மன்கள் வழங்கப்பட்டதாக இந்த நடவடிக்கைகளுக்கு தலைமை யேற்ற ரம்லான் பாசிர் தெரிவித்தார். மேற்கண்ட சில தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் உணவக உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை கள் எடுக்கக் கோரி கோலலங்காட் நகராண்மைக்கழகத் தலைவர் டத்தோ அமிருல் அஸிஸான் தங்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக அவர் கூறினார். இதனைத் தொடர்ந்து எங்கள் அமலாக்கப் பிரிவினர் இந்த உணவகங்களைக் குறி வைத்து அதிரடி நடவடிக்கை களை மேற் கொண்டனர். அதன் விளைவாக இங்கு ள்ள உணவகங்கள் மீது பல்வேறு குற்றப் பதிவுகள் செய்யப்பட்டதாக ரம்லான் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen − four =