பண்டார் சௌஜானா புத்ராவில் தூய்மைக்கேடு

0

இங்கு பண்டார் சௌஜானா புத்ரா சுற்றுப்புறங்களில் தூய்மைக்கேட்டை உருவாக்கியுள்ள குடியிருப்பாளர்கள் சிலருக்கு கோலலங்காட் மாநகர் மன்ற அதிகாரிகள் சம்மன்கள் வழங்கினர்.
நேற்று மாவட்ட சுகாதார இலாகா, காவல் துறை, பொதுப்பணி இலாகாவினரின் ஒத்துழைப்புடன் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் இப்பகுதி சுற்றுப்புறச் சுகாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதோடு இங்கு ஏடிஸ் கொசுக்களின் நடமாட்டம் இருப்பதை அவர்கள் நேரில் கண்டறிந்து நடவடிக்கையில் இறங்கினர்.
இதன் அடிப்படையில் 1974இன் சட்டப்பிரிவு 81(சி), பிரிவு 74, உட்பிரிவு 171இன் கீழ் 4 சம்மன்கள் இங்குள்ள குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
அந்நிய நாட்டவர்கள் அதிகமாக வசித்து வரும் இப்பகுதியை மாநகர் மன்றம் அடிக்கடி கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ளும் என அதன் ஒருங்கிணைப்பு அதிகாரி முகமட் ஹபிஸ் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × 3 =