பணியாளருக்காக துடித்துப்போன ரொனால்டோ..

பயிற்சி போட்டியின் போது, பெண் பணியாளருக்காக கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ செய்த விஷயம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்தாண்டு கால்பந்து உலகில் மிகப்பெரும் ஆச்சரியங்கள் நிகழ்ந்து வருகின்றன. கிறிஸ்டினோ ரொனால்டோ கோல் போஸ்டை நோக்கி மிக ஆக்ரோஷமாக அடித்த பந்து தவறுதலாக, களத்திற்கு வெளியில் இருந்த பெண் பணியாளர் தலையில் பட்டது. இதனால் அந்த இடத்திலேயே அவர் மயங்கி விழுந்தார். இதனையடுத்து மருத்துவக் குழு அவரை சூழ்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் களத்தை விட்டு வெளியேறி அந்த பெண்ணை நோக்கிச் சென்ற ரொனால்டோ, மருத்தவர்களிடம் அவரின் நிலை குறித்து விசாரித்தார். பின்னர் அந்த பெண்ணிடம் மன்னிப்பு கோரியது மட்டுமல்லாமல் தனது ஜெர்ஸியையும் அன்பளிப்பாக தருவதாக உறுதியளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × four =