பணம் இல்லாதது விவாகரத்துக்குக் காரணமா?

கோவிட் காலத்தில் அதிகமானோர் விவாகரத்துக்குப் பதிவு செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் வேலையின்மை, அதனால் ஏற்பட்டுள்ள பண நெருக்கடி, நிதி இல்லாமை போன்ற காரணங்களாகும். மலேசியர்களிடையே விவாகரத்துச் சம்பவங்கள் அதிகரித்து வந்துள்ளது பெரிய பிரச்சினையாகவே உருவெடுத்துள்ளது.கோவிட் காலத்தில் அதிகமானோர் விவாகரத் துக்குப் பதிவு செய்திருப்பதாக சிலாங்கூர் வழக்கறிஞர் மன்றத்தின் தலைவர் வி. கோகில வாணி தெரிவித்துள்ளார். பலர் தங்களது வேலைகளை இழந்துள்ளனர். வருமானம் இல்லாமல் போய்விட்டது. அதன் காரணமாக தங்களது திருமணங்களை இனி மேலும் தொடர்ந்து கட்டிக் காக்க முடியாது என்ற நிலைக்குத் தம்பதியர் தள்ளப்பட்டுள்ளதாக கோகிலவாணி தெரிவித்தார். கோவிட் பெருந்தொற்று பெரும்பான்மையான தம்பதியரை விழிப்புறச் செய்துள்ளதாகவும், இருவரிடமும் பிரச்சனைகள் எழுந்துள்ளதால் நிதிப் பிரச்சனையே முக்கியமாக இருப்பதன் காரணமாகத் தங்களது திருமணங்களை முடி வுக்குக் கொண்டு வருவதில் அவர்கள் தீர்க்கமான முடிவை எடுத்து அதனை செயல்படுத்தி வந்திருப்பதாக கோகிலவாணி தெரிவித்தார். கோவிட் காலத்தில் தம்பதியர் தங்களது உரிமைகளைத் தெரிந்து கொள்ள இணையதள கருத்தரங்குகள் வகை செய்திருப்பதாகவும் அதன் மூலம் தீர்க்கமான முடிவுகளை எடுக்க அவர்களுக்கு அது உதவி செய்து இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். பல தம்பதியருக்கு கோவில் காலத்தில் தனிமை படுத்தும் கால காலத்தில் ஒன்றாக இருந்து நேரத்தை செலவிட்டதாகவும் அதன் மூலம் அவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதோடு புரிந்து கொண்டிருப்பதோடு அவர்களின் இயலாமையையும் தெரிந்து கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார். ஆனால் ஒரு சிலரோ வீட்டிலேயே அடைந்து கிடந்து வேறு எங்கும் செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ள தம்பதியரிடையே ஏத்த கருத்து ஏற்படவில்லை என்றும் அதிகமான பிரச்சினைகள் தோன்றி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஒரு சில தம்பதியர் இடையே சின்ன சின்ன பிரச்சனைகள் கூட பூதாகரமாக வெடித்து அது விவாகரத்து வரை கொண்டு சென்று இருப்ப தாகவும் அவர் தெரிவித்தார். சாதாரண கழிவறை இருக்கைகளை சரி செய்ய முடியாமல் இருந்த காரணத்தினால் தம்பதிகள் இடையே பிரச்சினை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இதற்கு முன்னர் சாதாரண பிரச்சினைகள் ஆக இருந்தது கோவிட் காலத்தில் பெரும் பிரச்சினையாகவும் தீர்க்கமுடியாத பிரச்சினை யாகவும் அதிகரித்ததால் தம்பதியரிடையே விவாகரத்துகள் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார். கோவிட் காலத்தில், ஒவ்வொரு நாளும் 140 க்கும் குறையாத விவாகரத்துகள் பதிவு செய்யப்பட்டதாகப் பிரதமர் துறை துணை அமைச்சர் டத்தோ மாஸ் எர்மியாத்தி சம்சுடின் தெரிவித்துள்ளார். இந்த எண்ணிக்கையில் 123 விவாகரத்துகள் முஸ்லிம்களிடையே எழுந்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார். பல தம்பதியர் சாதாரண விஷயங்களைப் பெரிது படுத்தாமல் இயல்பாக எடுத்துக் கொண்டு தங்களது பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து கவலை கொண்டிருந்ததால் இம்மாதிரி யானப் பிரச்சினைகள் பெரிய அளவில் வியாபிக்க வில்லை. அதனை தங்களுக்குள்ளே தீர்த்துக் கொண்டதாகவும் கோகிலா தெரிவித்தார். மேலும், பெண்கள் குடும்பத்தில் வருமானத் தைக் கொண்டு வராத நிலையில், அவர்கள் பெரும்பாலும் கணவன்மார்களை நம்பியே இருந்ததால் விவாகரத்து எனும் பேச்சு எடுபட வில்லை. தற்போது ஆண்களும் பெண்களும் சரிசமமாக வேலை செய்து வருமானத்தைக் கொண்டு வருவதால் ஈகோ பிரச்சினை தலையெடுத்து சிறிய பிரச்சினை கூட பெரிய பிரச்சனையாக உருவெடுத்து அதை விவாகரத்துக்குக் கொண்டு செல்வதாகவும் கோகிலா தெரிவித்தார். 70, 90 ஆம் ஆண்டுகளில் பெண்கள் பொதுவாக விழிப்புணர்ச்சி இல்லாமல் இருந்த காலத்தில், விவாகரத்துகள் அதிகமாக காணப்படவில்லை ஆயினும். தற்போது பெண்களும் ஆண்களும் தொழிலில் ஈடுபட்டு வருமானத்தை ஈட்டி வருவதால் தங்களின் உரிமையை நிலைநாட்ட ஆண்களுக்கு சமமாக முடிவெடுக்கும் தன்மையைக் கொண்டிருப்பதால், ஆண்களுக்கு எதிராகவும் அவர்கள் செயல்பட தற்போது முனைந்து உள்ள தாகவும் அவர் தெரிவித்தார். எனவே, தற்போது பெண்கள் மிகவும் தைரியத் தோடு வாழ்க்கையை எதிர்கொள்ள ஆண்களுக்கு சமமாக முடிவெடுக்கும் தன்மையை கொண்டு விவாகரத்து செய்துகொள்ள முனைப்பு காட்டி வருகின்றனர். அவர்கள் ஆண் துணையின்றி இனி தங்கள் வாழ்க்கையை நடத்த முடியும் என்ற நிலைக்கும் தள்ளப்ப்பட்டுள்ளனர். இதற்கு முன்னர், விவாகரத் தான பெண்கள் இழிநிலைக்கு தள்ளப்பட்டு வந்துள்ளது குறிப்பிடத் தக்கது. ஆனால், காலம் மாறி விட்டது. சொந்த முடிவுகளை எடுத்து விவாகரத்து கேட்கும் நிலைக்குப் பெண்கள் தள்ளப் பட்டுள்ளனர். இதன் காரணமாக தற்போது விவா கரத்துகள் அதிக அளவில் அதிகரித்து வருவதில் வியப் பில்லை. கோவிட் காலத்தில் பெண்கள் வீட்டி லேயே இருந்தபடி இணைய தளத்தை வலம் வந்து தங்களது உரிமைகளைப் புரிந்து கொண்டிருப்பதால், அது அவர் களுக்கு மிகுந்த ஊக்கத்தைத் தந்து இருப்பதாகவும் தங்களது உரிமைகளை நிலைநாட்ட உதவி செய்து வருவதாகவும் சொல்லப் படுகிறது. அவர் மேலும் கூறும்போது,தம்பதி யரில் கணவரால் மிகவும் கொடுமைப்படுத் தப்பட்ட மனைவியானவர் இனிமேலும் பொறுக்க முடியாமல் தமது கணவரிட மிருந்து விவாகரத்துக்குப் பதிவு செய் திருப்பதாகவும் கோகிலா தெரிவித்தார். இதற்கு முன்னர், இருந்த விட்டுக் கொடுக்கும் போக்கு தற்போது தம்பதியரிடையே இல்லாது, குறைந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். தம்பதியரிடையே புரிந்துணர்வும் கருத்துரிமை யும் இருந்த காலம் மாறி இப்போது போட்டா போட்டியோடு காலத்தைக் கழிக்க வேண்டிய நிலையில் தம்பதியர் தள்ளப்பட்டுள்ளனர். இங்கு இறுமாப்பும் ஈகோ தன்மையும் அதிகமாக இருந்துள்ளது திருமண பந்தங்களை துச்சமாக மதிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் முஸ்லிம்களிடையே விவாகரத் துகள் அதிகரித்து வருவதற்கு முக்கிய காரணம் இரண்டாவது மனைவி வாழ்க்கையில் புகுந்து பிரச்சினையை உருவாக்குவதுதான் என்று கோகிலா தெரிவித்தார். ‘மனைவிக்கு நம்பகமாக இருந்த காலம் போய், தனது இன்பத்திற்காக திருமண பந்தத்தைத் துறந்து வேறு துணையைத் தேடும் ஆண்கள் இப்போது அதிகமாகி இருப்பதால் தம்பதியரிடையே விவாகரத்துச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. மனைவி ஒருவர் தமது கணவர் வேறு ஒரு மனைவியோடு குடும்பம் நடத்துவதைக் கண்டறிந்த பின்னர், அதனைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் விவாகரத்து கோரி வழக்கு தொடுத்து இருப்பதாகத் தெரிவித் தார். பெரும்பாலோர் வீட்டிலேயே இருந்தபடி காலத்தைக் கழித்தபோது கணவர் வேறொரு பெண்ணோடு குடும்பம் நடத்துவதை ஏதேச்சை யாகக் கண்டு பிடித்ததாக அந்த மனைவி குறிப் பிட்டார். மனைவிக்கு 18 வயது கணவருக்கு 19 வயது. இந்த வயதில் திருமணம் செய்து கொண்ட தம்பதியர் மண முறிவு ஏற்பட்டு விவாகரத்துக் கோரியதாகவும் தெரியவருகிறது. கணவர் மனைவியிடம் பொய் கூறி வீட்டி லிருந்து வெளியேறி, வேறு ஒரு பெண்ணோடு குடும்பம் நடத்தியது கண்டு பிடிக்கப்பட்டது. இதனைப் பொறுக்க முடியாமல் மனைவி, விவாகரத்துக் கோரி வழக்கைத் தொடர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘கோகிலா மேலும் கூறும்போது, தற்போதைய விவாகரத்துக்கு முக்கியமாக குடும்ப பிரச்சனை களைக் கையாள முடியாமல், வேலைகளை சமமாகப் பங்கீடு செய்து கொள்ள முடியாமல், பிள்ளைகளைப் பராமரிக்க இருவராலும் முடியாமை போன்ற மன அழுத்தம், மனப் பதட்டம் போன்ற காரணங்களால் விவாகரத்துகள் அதிகரித்து வருவதாக அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × 2 =