பட்ஜெட்டுக்கு எம்பிக்கள் ஆதரவு
ஒருகணம் நெகிழ்ந்துபோனேன்

2021 வரவுசெலவுத் திட்டத்தை அங்கீகரிப்பதை ஆதரித்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிலைப்பாடு குறித்து ஒருகணம் நெகிழ்ந்து போனதாக பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் தெரிவித்தார்.
2021 பட்ஜெட்டிற்கு, மக்களவையில் ஒப்புதல் அளித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பட்ஜெட்டை ஆதரித்த எம்.பி.க்களின் நிலைப்பாட்டில் நான் நெகிழ்ந்து போனேன்.
அரசியல்வாதிகள் தங்கள் அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு, இந்த வரவுசெலவுத் திட்டத்தை தடையின்றி அங்கீகரிக்க அனுமதிக்க வேண்டும் என்ற நமது மாமன்னரின் கட்டளையை அவர்கள் நிறைவேற்றியிருக்கிறார்கள். குறிப்பாக நாடு கோவிட்-19 தாக்கத்தில் போராடிக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பட்ஜெட்டிக்கு ஆதரவு தெரிவித்திருப்பதாக அவர் சொன்னார்.
கடந்த சில நாட்களாக, அதிகமானோரின் கவனத்தை ஈர்த்த 2021 பட்ஜெட் நேற்று முன்தினம் மக்களவை வாக்களிப்பின் மூலம் ஒப்புதல் அளிக்கப்பட்டது. கொள்கை மட்டத்தில், 2021 வரவு செலவுத் திட்டத்தை ஆதரித்த அனைத்து எம்.பி.க்களுக்கும், குறிப்பாக பெரிக்காத்தான் நேஷனல், தேசிய முன்னணி, சரவாக் கூட்டணி கட்சி (ஜி.பி.எஸ்.) மற்றும் பார்ட்டி பெர்சத்து சபாவைச் (பிபிஎஸ்) சேர்ந்த அனைத்து எம்.பி.க்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த ஆதரவு, மற்ற விஷயங்களை விட, மக்களின் நலன், வாழ்க்கைப் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்விற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற இந்த முடிவு எம்.பி.க்களின் முதிர்ச்சியை நிரூபிக்கிறது என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here