பச்சை மண்டல நாடுகளின் எல்லைப் பகுதிகளை மீண்டும் திறக்க நடவடிக்கை

சுற்றுலாத்துறையை மேம்படு த்த பச்சை மண்டல நாடுகளின் எல்லைப் பகுதிகளை மீண்டும் திறப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக சுற்றுலா, கலை, பண்பாட்டுத் துறை அமைச்சர் நான்சி சுக்ரி கூறினார்.
தங்களுடைய வர்த்தகம் தொடர்ந்து செயல்பட எல்லைப் பகுதிகளை மீண்டும் திறப்பது குறித்து சுற்றுலாத்துறை நிறுவனம் அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.
இருப்பினும் இந்த விவகாரம் குறித்து சுகாதார அமைச்சு உட்பட இதர அமைச்சுகளுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தும் என்றார் அவர்.
கோவிட்-19 தொற்று தொடர்ந்து நீடித்து வருவதால், இந்த விவகாரத்தில் அரசாங்கம் விழிப்புடன் செயல்பட வேண்டிய கட்டாயம் உள்ளதாக அவர் சொன்னார்.
மேலும் பச்சை மண்டல நாடுகளுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தும் என நேற்று இங்கு நடந்த நிகழ்ச்சிக்குப் பின் அவர் பேசினார்.
உள்நாட்டு சுற்றுலாத் துறையை மேம்படுத்த பல திட்டங்களை அரசாங்கம் வகுத்து வருவதாக நான்சி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here