பசார் போரோங்கை ஆக்கிரமித்து அராஜகம் புரிந்த ரோஹிங்யாக்கள்

பசார் போரோங் சுற்று வட்டாரத்தில் வசித்து வந்த அகதிகள் அந்தஸ்து பெற்ற ரோஹிங்யாக்கள் இதுவரை அந்த மொத்த விற்பனைத் தளத்தில் பணியாற்றியதே இல்லை. இவர்கள் பசார் போரோங் சுற்றுவட்டாரத்தை ஆக்கிரமித்துக் கொண்டு வர்த்தக ரீதியில் அராஜகமான பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள்.
செலாயாங், ஏப். 30-
அண்மையில் பசார் போரோங்கைச் சுற்றி இருக்கும் கிட்டதட்ட 8 குடியிருப்புப் பகுதிகள் முற்றிலும் ஊரடங்கு உத்தரவிற்கு உட்படுத்தப் பட்டன. இதனால் கிட்டதட்ட 15,000க்கும் மேற்பட்ட ரோஹிங்யாக்கள் முழுமையாக தங்கள் குடியிருப்புப் பகுதிகளில் அடைக்கப்பட்டனர் என்று கூறப்பட்டது.
காலங்காலமாக ரோஹிங் யாக்கள் பசார் போரோங்கைச் சுற்றித்தான் வசித்து வருகிறார்கள். இந்த ரோஹிங்யாக்கள் அங்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள் என்பது உண்மைதான்.
ஆனால் பசார் போரோங்கில் காய்கறிகள் மற்றும் மீன் வியாபாரக் கடைகளில் இந்த ரோஹிங்யாக்கள் ஒருபோதும் பணியாற்றியதில்லை என்பதுதான் உண்மை நிலவரம்.
பசார் போரோங்கில் பணியாற்றுபவர்கள் அனைவரும் மியன்மார் நாட்டைச் சேர்ந்த தமிழர்கள் ஆவர். முகத்தில் சந்தனத்தைப் பூசிக்கொண்டு அங்குமிங்கும் பரபரப்பாக அலைந்து திரியும் அந்த பணியாளர்களைப் பார்த்தாலே நமக்கு நன்றாகத் தெரியும். அவர்கள் மியன்மார் வாசிகள் என்று.
இவர்களில் பெரும்பாலானவர் கள் நன்றாகத் தமிழ் பேசக்கூடியவர் கள். இது ஒரு புறமிருக்க இந்த ரோஹிங்யாக்கள் பசார் போரோங்கில் என்ன செய்கிறார்கள் என்று கொஞ்சம் ஆழமாக அலசிப் பார்ப்போம்.
இவர்கள் பசார் போரோங்கை மூலதனமாகக் கொண்டுதான் தங்களின் வாழ்வாதாரத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
பசார் போரோங் சுற்றுவட் டாரத்தில் இந்த ரோஹிங்யாக்கள் ஒரு தனி சாம்ராஜ்ஜியத்தையே நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
பசார் போரோங்கில் வியாபாரம் செய்பவர்களுக்கு வட்டிக்குப் பணம் கொடுப்பது, மொத்தமாக காய்கறி மற்றும் மீன் வகைகளை வாங்கி அராஜகமாக வியாபாரம் செய்வது, உணவகம் நடத்துவது இப்படி பல்வேறு வேலைகளை இவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.
இவை எல்லாவற்றையும் இவர்கள் அகதிகள் அந்தஸ்தில் இருந்துதான் செய்கிறார்கள். பல சமயங்களில் இந்த ரோஹிங்யாக்களிடம் வர்த்தக ரீதியில் மோதமுடியாமல் தோற்றுப்போகும் உள்நாட்டு வர்த்தகர்களும் இருக்கிறார்கள்.
அதனால்தான் பசார் போரோங்கில் இருக்கும் வர்த்தகர் கள் யாரும் ரோஹிங்யாக்களின் பக்கம்கூட தலைவைத்துப் படுப்பதில்லை. தங்களுக்கென்று ஒரு தனி வாடிக்கையாளர் வட்டத்தை வைத்துக் கொண்டு அப்படியே வர்த்தகம் செய்து கொண்டிருக்கிறார்கள் பசார் போரோங்கைச் சேர்ந்த உள்நாட்டு வர்த்தகர்கள்.
பசார் போரோங்கில் பொருட்களை மொத்தமாக வாங்கி சில்லறையில் விற்று லாபம் பார்க்க வேண்டுமா? அதற்கு உங்களுக்கு முதல் தேவைப்படுகிறதா? ரோஹிங்யாக்களைப் பார்த்தால் குறைந்தபட்சம் 1,000 வெள்ளியில் இருந்து அதிகபட்சம் சில பல ஆயிரங்கள் வரை உடனடியாகக் கிடைக்கும்.
அந்த வியாபாரத்தை முடித்துக் கொண்டு அன்றிரவே வாங்கிய அசலோடு வட்டியையும் சேர்த்து திருப்பிக்கொடுத்தாக வேண்டும். இல்லையென்றால் விளைவை பணம் வாங்கியவர்கள்தான் சந்திக்க வேண்டியிருக்கும்.
பசார் போரோங்கில் ஒரு கிலோ இறால் மொத்த பரிவர்த்தனையில் 28 வெள்ளிக்கு விற்கப்படுகின்றது என்றால், அதே விலை அல்லது அதை விடக் குறைந்தவிலையில் இந்த ரோஹிங்யாக்கள் சில்லறை வியாபாரத்தில் அதே பொருளை விற்பனை செய்கிறார்கள். இது எப்படி சாத்தியம் என்று பார்த்தால், இந்த ரோஹிங்யாக்களின் தராசு எடை மோசடி செய்யப்பட்ட நிறுவையைக் காட்டும் தராசாக தயாரிக்கப்பட்டிருக்கிறது.
இப்படி எல்லாவற்றிலும் அவர்கள் வைத்ததுதான் சட்டம். அந்த ரோஹிங்யாக்களின் அராஜ கத்தையும் அட்டூழியங்களையும் தாங்க முடியாமல் பசார் போரோங் சுற்றுவட்டாரத்தில் இயங்கிக் கொண்டிருந்த வங்கி உட்பட பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களின் கிளை அலுவலகங்கள் வேறு பகுதிகளுக்கு மாறிச் சென்று விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படிப்பட்ட ரோஹிங்யாக்கள் எப்படி அவ்வளவு செல்வாக்காகச் செயல்பட்டார்கள் என்பதை இன்னும் ஆழமாக ஆராய்ந்தால் விஷயம் வேறுவிதமாகப் போகும். இன்று எல்லோருமே இந்த முள்வேலிகளுக்குள் மாட்டிக் கிடக்கும் ரோஹிங்யாக்களுக்காக பரிதாபப்படுகிறார்கள். அது மனித நேயம்.
ஆனால் பசார் போரோங் ஒரு முறையான மொத்த வியாபாரத் தளமாகச் செயல்பட வேண்டுமானால், இந்த ரோஹிங்யாக்கள் அகதிகளாக மட்டுமே இருக்க வேண்டும்.

1 COMMENT

  1. ரொகிங்யா மக்கள் முன்பு கள்ளதோனிகளில் மலேசியாவிற்கு அகதிகளாக (Boat people) நுழைந்தவர்கள்.இவர்கள் முன்பு மியன்மாரில் உள் நாட்டு கலவரம் ஏற்பட்டதால் அங்கிருந்து அண்டை நாடுகளுக்கு அகதிகளாக குடியேறிவர்கள் இப்போது அவர்கள் நாட்டில் போர் முடிந்து விட்டது. மியன்மார் தற்போது இயல்பு நிலைக்கு வந்து விட்டது.ரொகிங்யா மக்கள் இங்கு விருந்தாளிகளாக பல ஆண்டுகள் இருந்து விட்டார்கள். இனி அவர்கள் தாய் நாட்டிற்கு திரும்பி போக வேண்டும்.அதை விடுத்து அராசகத்தில் ஈடுபடக்கூடாது.மலேசியாவின் சட்டத்தை கடைபிடிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 + 7 =