பசார் போரோங்கில் தொழிலாளர்கள் பற்றாக்குறை மோசமடைந்துள்ளது

0

செலாயாங் பசார் போரோங்கில் தொழிலாளர்கள் பற்றாக்குறை மோசமடை ந்துள்ளதாக அங்குள்ள வர்த்தகர்கள் புகார் கூறியுள்ளனர்.
உள்ளூர் தொழிலாளர்கள் இங்கு வேலை செய்ய மறுத்து வருகின்றனர். நாள் ஒன்றுக்கு 100 வெள்ளி சம்பளமாகக் கொடுத்தாலும் உள்ளூர் தொழிலாளர்கள் வேலை செய்வதற்கு முன்வரவில்லை என கோலாலம்பூர் காய்கறி மொத்த வியாபாரிகள் சங்கத் தலைவர் வோங் பெங் ஃபாட் கூறினார்.
கோவிட்-19 வைரஸ் தாக்கத்தால் இங்கு வேலை செய்ய அந்நியத் தொழிலாளர் களுக்கு கோலாலம்பூர் மாநகர் மன்றம் தடைவிதித்துள்ளது.
தொடக்கக் கட்டத்தில் இங்கு வேலை செய்ய உள்ளூர் தொழிலாளர்கள் முன்வந்த போதிலும், பசார் போரோங்கில் உள்ள வேலை சூழ்நிலையால் இவர்கள் மறுத்து வருவதாக அவர் சொன்னார்.
ஆகையால் பி40 வறுமைக் கோட்டில் உள்ள உள்நாட்டவர் களை வேலைக்கு அமர்த்துவது குறித்து பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரனுடன் தாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.
பத்து நாடாளுமன்ற உறுப்பினர் 50க்கும் மேற்பட்ட உள்நாட்டவர்களை எங்களுக்கு அறிமுகம் செய்தார். ஆனால் அவர்களில் இருவர் மட்டுமே வேலை செய்ய முன்வந்ததாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த காலத்தில் அந்நியத் தொழிலாளர்களை நாம் அதிகம் நம்பியிருந்ததால்தான் தற்போது தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
பசார் போரோங்கில் தொழிலாளர்கள் பற்றாக்குறையை நிரப்ப சுமார் 3,000 உள்நாட்டுத் தொழிலாளர்கள் தேவைப் படுவதாக அவர் தெரிவித்தார்.
கோவிட்-19 வைரஸ் தாக்கத்தைத் தொடர்ந்து பசார் போரோங்கில் வேலை
செய்ய அந்நியத் தொழிலாளர்களுக்கு அனுமதியில்லை என கூட்டரசுப் பிரதேச அமைச்சர் அனுவார் மூசா ஏற்கெனவே கூறியிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 + 13 =