பக்காத்தான் ஹராப்பான் மீது மக்களின் நம்பிக்கை சரிகிறது

பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம், பொதுத்தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதை மக்கள் உணரத் தொடங்கிவிட்டதாக ஜசெக கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ கூறினார். இதன் காரணமாக பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் மீது மக்களின் நம்பிக்கை சரிந்து வருவதாக அவர் குறிப்பிட்டார். மக்களுக்கு சேவையாற்றுவதை விட்டு விட்டு, ஸக்கீர் நாயக் மற்றும் ஜாவி எழுத்து போன்ற சர்ச்சைகளில் பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் தங்கள் கவனத்தைச் செலுத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதில் நடப்பு அரசாங்கம் அதிக கவனம் செலுத்தவில்லை என்றார் அவர். நாட்டில் திடீர் தேர்தல் நடைபெறுமானால் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் தோல்வியடையும் என பெர்சத்து கட்சியின் வியூகப் பிரிவு இயக்குனர் ராய்ஸ் ஹுசேன் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கை குறித்து சார்ல்ஸ் கருத்துரைத்தார்.
அன்றாட வாழ்க்கைச் செலவினம், வேலை வாய்ப்பு திண்டாட்டம், ஏற்றத்தாழ்வு போன்றவைதான் மக்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகள் என்றார் அவர்.
இது போன்ற விவகாரங்களுக் குத்தான் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
’தாங்கள் மாற்றப்படுவதற்குள், தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதை பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் நினைவில் கொள்ள வேண்டும் என சார்ல்ஸ் நினைவுறுத்தினார்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × 2 =