பக்காத்தான் ஹராப்பான் மாநில சட்டமன்றங்கள் கலைக்கப்படாது

திடீர் தேர்தல் நடத்தப்பட்டால் பக்காத்தான் ஹராப்பான் நிர்வாகத்தின் கீழ் உள்ள மாநில சட்டமன்றங்கள் கலைக்கப்படாது என பக்காத்தான் ஹராப்பான் தலைமைத்துவ மன்றம் முடிவு செய்துள்ளது.
கோவிட்-19 தாக்க காலகட்டத்தில் தேர்தலை நடத்த வேண்டிய அவசியம் எதுவும் இல்லை என நேற்று காலை நடைபெற்ற பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் மன்றக் கூட்டத்திற்குப் பிறகு வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்று கூறியது.கோவிட்-19 தாக்கத்தால் மக்கள் எதிர்நோக்கியுள்ள சுமைகளில் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் கவனம் செலுத்த வேண்டும்.
5 ஆண்டுகால தவணைக்கு முன்பாக பொதுத்தேர்தல் நடத்தப்பட்டாலும், பக்காத்தான் ஹராப்பான் நிர்வாகத்தின் கீழ் உள்ள மாநில சட்டமன்றங்கள் கலைக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை என தாங்கள் கருதுவதாக பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் அந்த அறிக்கையில் குறிப்பிட்டனர்.
பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் பிகேஆர், ஜசெக, அமானா ஆகிய 3 கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 + three =