பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் மன்றம் அடுத்த வாரம் கூடுகிறது

எதிர்க்கட்சிக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்ய அடுத்த வாரம் தலைவர்கள் மன்றக் கூட்டத்தை நடத்த பக்காத்தான் ஹராப்பான் திட்டமிட்டுள்ளது.
பிரதமர் வேட்பாளராக வாரிசான் தலைவர் ஷாபி அப்டால் பரிந்துரைக்கப்பட்ட தைத் தொடர்ந்து தலைவர்கள் மன்றக் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என ஜசெக மற்றும் அமானா வலியுறுத்தியுள்ளது.
வரும் ஜூலை 13ஆம் தேதி நாடாளுமன்றக் கூட்டம் நடைபெறவுள்ளதால், அதற்கு முன்பாகவே தலைவர்கள் மன்றக் கூட்டம் நடைபெற வேண்டும் என ஜசெக கேட்டுக் கொண்டது.
அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் தலைவர்கள் மன்றக் கூட்டத்தில் பிரதமர் வேட்பாளர் முடிவு செய்யப்படுவார் என பக்காத்தான் ஹராப்பான் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
பிரதமர் வேட்பாளராக பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமும் துணைப் பிரதமர் வேட்பாளராக டத்தோஸ்ரீ முக்ரிஸும் பரிந்துரைக்கப் பட்டனர்.
மேலும் பிரதமர் வேட்பாளராக துன் மகாதீர் மற்றும் துணைப் பிரதமர் வேட்பாளராக அன்வார் இப்ராஹிம் பரிந்துரை செய்யப்பட்டனர்.
ஆனால் கடந்த வாரம் பிரதமர் வேட்பாளராக வாரிசான் தலைவர் ஷாபி அப்டால், துணைப் பிரதமர் வேட்பாளராக அன்வார் இப்ராஹிம் பெயர்களை மகாதீர் பரிந்துரை செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × 3 =