பக்காத்தான் ஹராப்பானுக்கு வெளியில் உள்ள எம்பிக்களின் ஆதரவும் அன்வாருக்கு இருக்கிறது

பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அடுத்த பிரதமராவதற்கு 92க்கு மேற்பட்ட எம்பிக்களின் ஆதரவு இருக்கிறது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறினார்.

புதன் இரவு பெர்னாமா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அன்வாரின் தலைமைத்துவத்தின் கீழ் ஓர் அரசாங்கத்தை உருவாக் குவதற்கு பக்காத்தான் ஹராப்பானுக்கு போதுமான எம்பிக்களின் ஆதரவு கிடைக்கும் என்று தாம் நம்புவதாக அவர் கூறினார்.

92 என்று கூறப்படுவது தற்போது பக்காத்தான் ஹராப்பானில் உறுப்பியம் பெற்றிருக்கும் ஜசெக (42), பிகேஆர் (39), அமானா (11) ஆகிய 3 கட்சிகளின் மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆவர்.

அரசாங்கத்தை அமைப்பதற்கு குறைந்தபட்சம் 112 எம்பிக்களின் ஆதரவு அன்வாருக்குத் தேவைப்படுகிறது. 112 என்பது சாதாரண பெரும்பான்மை ஆகும். மகாதீருக்குப் பதிலாக அன்வாரை பிரதமர் பதவிக்குத் தேர்வு செய்திருப்பதாக பக்காத்தான் ஹராப்பான் புதன்கிழமையன்று அறிவித்தது.

எந்த அரசியல் கட்சியையும் சாராத ஒரு நிர்வாகத்தை அமைக்கப்போவதாக மகாதீர் தொலைக்காட்சிப் பேட்டியில் அறிவித்ததைத் தொடர்ந்து பிகேஆரின் இந்த அறிவிப்பு வெளியாகியது. திடீர் தேர்தல் அறிவிக்கப் பட்டால், பிகேஆர் வெற்றி பெறுமா என்று வினவப்பட்டது. மற்ற எதிர்க்கட்சியினரின் அரசியல் அணியை விட, பக்காத்தான் ஹராப்பான் தேர்தலை எதிர்நோக்குவதற்கு தயார் நிலையில் இருக்கிறது என்று அவர் பதிலளித்தார்.

மலாய்க்காரர்களின் மூன்று கட்சிகளான அம்னோ, பெர்சத்து மற்றும் பாஸ் தங்களுக்குள் தொகுதிகளைப் பங்கீடு செய்வதில் பிரச்சினையை எதிர்நோக்கும் என சைபுடின் தெரிவித்தார். பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் உறுப்பியம் பெற்றிருக்கும் பிகேஆர், ஜசெக, அமானா ஆகிய கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு ஒரு பிரச்சினையாக இருக்காது. மேலும் கடந்த தேர்தலில் பெர்சத்து விட்டுச் சென்ற தொகுதிகள் வேறு இருக்கின்றன என்று அவர் சொன்னார்.

பேரரசர் நாடாளுமன்றத்தைக் கலைக்க முடிவெடுத்தால், 60 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × two =