பக்காத்தான் ஹராப்பானின் அமைச்சராக இருந்ததை அஸ்மின் மறந்து விட்டார்

பக்காத்தான் ஹராப்பான் அமைச்சரவையில் தாம் ஓர் அமைச்சராக இருந்ததை டத்தோஸ்ரீ அஸ்மின் அலி மறந்து விட்டார் என்று ஜொகூர் செம்புரோங் கெஅடிலான் தலைவர் ஷாருன் ரட்ஸி சாடினார்.
பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியில் இவர் பொருளாதார விவகார அமைச்சராக இருந்தார்.
ஆனால் இன்று இவர் பக்காத்தான் ஹராப்பானை குறைகூறிக் கொண்டிருக்கிறார்.
வானத்தை நோக்கி எச்சில் துப்பினால் அது முகத்தில் விழும் என்பதை அவர் மறந்து விட்டார் போலும்.
பொருளாதார அமைச்சராக இருந்த இவரின் பங்கு என்ன என்று ஷாருண் ரட்ஸி கேள்வி எழுப்பினார்.
பெல்டா நிலப் பிரச்சினை, குடியேற்றக்காரர்கள் எதிர்நோக்கிய கடன் பிரச்சினை எல்லாம் அவர் மறந்து விட்டாரா என்று அவர் கேள்வி எழுப்பினார்.
மக்களால் தேர்வு செய்யப்பட்ட பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு பெட்டாலிங் ஜெயா ஷெரட்டன் ஹோட்டலில் நடந்த நிகழ்ச்சியும் நம்பிக்கைத் துரோகமும் ஒரு காரணம் என அவர் சாடினார்.
இந்நாட்டில் காலங்காலமாக ஜனநாயகம் கடைப்பிடிக்கப்பட்டது.
ஆனால் இப்போது முதுகில் குத்தும் நம்பிக்கைத் துரோகச் செயல்கள் அதிக அளவில் அரங்கேறிக் கொண்டிருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen − seven =