பக்காத்தான் பங்காளிக் கட்சிகளுக்கிடையிலான ஒத்துழைப்பு வலிமையாக இருந்து வருகின்றது

0

பக்காத்தான் ஹராப்பான் பங் காளிக்கட்சிகளுக்கிடை யிலான ஒத்துழைப்பு வலிமையாக இருந்து வருவதாக பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
எனது கூட்டணி பங்காளி களை நண்பர்களாக நான் கருது
கிறேன். 14ஆவது பொதுத்தேர் தலில் வெற்றிபெற நாங்கள் ஒன்றிணைந்து பாடுபட்டோம். இந்த ஒத்துழைப்பு மக்களின் நலன்களுக்காக மலரவேண்டும்” என போர்ட்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் தெரிவித்
தார். பிரதமர் துன் டாக்டர் மகாதீரை இப்போது நான் ஆதரிக் கிறேன். இப்போது நிலைமை அமைதியாக இருக்கிறது. மக்களின் நலனுக்காக நாங்கள் ஒன்றிணைந்து செயல்பட்டு வரு கிறோம்” என அவர் சொன்னார்.
நேற்று முன்தினம் இரவு இங்கு கெர்டாவில் பகாங் பிகேஆர் பேரா
ளர்கள் மாநாட்டைத் தொடக்கி வைத்து அவர் பேசினார்.
பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகின்றது. மக்களின் நலன் களைக் கருத்தில் கொண்டு பல
திட்டங்களை அது வகுத்து வருவ தாக அவர் சொன்னார்.
மக்களின் வாழ்க்கைச் செல வினத்தைக் குறைக்க சரியான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அன்வார் தெரிவித்தார். -மலேசியா கினி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 − twelve =