பக்காத்தான் தோல்வி ஏன்?

மலாக்கா மாநிலத் தேர்தலில் மிகவும் உறுதியோடு போட்டியிட்ட பக்காத்தான் ஹராப்பான் தனது உறுப்புக் கட்சியான ஜசெகவின் மூலம் 5 தொகுதிகளை மட்டுமே வெற்றி கொள்ள முடிந்துள்ளது. பிகேஆர் 11 தொகுதிகளில் போட்டியிட்டாலும் அது எத்தொகுதி யிலும் வெற்றி பெற இயலவில்லை. அதற்கு ஜசெகவின் ஒத்துழைப்பு குறைவினால்தான் என்று கூறப்படுகிறது.கட்சி தாவிய முன்னாள் முதலமைச்சர் இட்ரிஸ் ஹரோன், நோர் அஸ்மான் ஹசான் ஆகியோர் பக்காத்தான் சார்பில் போட்டிட்டதை விரும்பாத ஜசெக இத்தேர்தலில் முழு ஒத்துழைப்பை வழங்காத நிலையில், இத்தோல்வி ஏற்பட்டதாக பொதுவாகச் சொல்லப்படுகிறது. இட்ரிஸ் ஹரோன் அசஹானிலும் நோர் அஸ்மான் பந்தாய் குண்டோரிலும் போட்டியிட்டதை அனுமதித்த பிகேஆர், அமானாவின் முடிவை ஜசெக வன்மையாகச் சாடி தேர்தல் இருந்து பின்வாங்கியது குறிப்பிடத்தக்கது. கட்சி தாவி வருவோருக்குப் பக்காத் தான் அடைக்கலம் தரக்கூடாது என்ற கருத்தில் ஜசெக உறுதியாக இருந் ததுதான் பக்காத்தான் தோல்விக்குக் காரணமாக இருக்கக் கூடும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருது கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × three =