பக்காத்தான் ஹராப்பான் கொள்கைகளை ஏற்றால் மட்டுமே முன்னாள் பிரதமர் துன் மகாதீருடன் தாம் ஒத்துழைக்கத் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.எந்தவொரு தலைவரும் சுயலாபம் கருதியோ கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கத்திலோ வரக்கூடாது என அவர் தெளிவுபடுத்தினார்.இந்த நிலைப்பாடு ஏற்றுக் கொள்ளப்பட்டால் மெகா கூட்டணியில் மகாதீர் இணைய பக்காத்தான் ஹராப்பான் எதிர்ப்புத் தெரிவிக்காது என்றார் அவர்.
இருப்பினும் இந்த விவகாரத்தை பக்காத்தான் ஹராப்பானிடம் தாம் விட்டு விடுவதாக கூட்டணியின் தலைவரும் பிகேஆர் தலைவருமான அவர் தெரிவித்தார்.
நேற்று இங்கு ‘மறுமலர்ச்சி 2008-2011’ என்ற தலைப்பிலான நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பின் போர்ட்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.