பக்காத்தான் கூட்டணிக்கு சாதகமாக தேர்தல் முறையை சீர்திருத்தம் செய்ய வேண்டாம்

இடைதேர்தல்களில் தோல்வியுற்றதன் காரணமாக தேர்தல் முறையை பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் சீர்திருத்தம் செய்யக்கூடாது என்று அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹஸான் கூறினார்.
பரிந்துரைக்கும் மாற்றங்கள் வெளிப்படையாகவும் மக்களின் அபிலாஷைகளை கவனத்தில் கொள்ளும்படியும் இருக்க வேண்டும் என்று நெகிரி செம்பிலான் முன்னாள் மந்திரி பெசாருமான அவர் நேற்று அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
பல வருடங்களாக அமலில் இருக்கும் முறையின் அடிப்படையில் இம்மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என அவர் கூறினார்.
4 இடைத்தேர்தல்களில் தோல்வியடைந்த பிறகு கவலையும் பயமும் அடைந்ததன் காரணமாக புதிய தேர்தல் முறையை பக்காத்தான் அரசாங்கம் பரிந்துரைக்காது என்று நான் நம்புகிறேன். இது முக்கியமாகும். ஏனெனில் இத்தகைய மாற்றங்கள் மலேசியாவின் ஜனநாயகத்தை பிரதிநிதிக்கவில்லை.
சீர்திருத்தம் செய்வதில் எனக்கு ஒன்றும் பிரச்சினையில்லை. ஆனால் அவை பொருத்தமாகவும் நியாயமாகவும் இருப்பது அவசியம். தற்போது உள்ள முறையை முழுமையாக மாற்றியமைக்கக்கூடாது.
எந்த பரிந்துரையும் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதாக இருக்க வேண்டும். யாருடைய அடிப்படை ஜனநாயக உரிமையையும் மீறுவதாகவோ அழிப்பதாகவோ இருக்கக்கூடாது என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

thirteen + 16 =