பக்காத்தான் ஆட்சியை பிடிப்பதற்கு இந்தியர்கள் பெரும் பங்காற்றினர்

0

இந்த நாட்டில் பக்காத்தான் கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு இந்தியர்கள் பெரும் பங்காற்றியுள்ளனர் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். நேற்று முன்தினம் பங்சாரில் உள்ள நெக்சஸ் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற கோலாலம்பூர் – சிலாங்கூர் இந்திய வர்த்தக மற்றும் தொழிலியல் சம்மேளனத்தின் 90ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நடந்து முடிந்த போர்ட்டிக்சன் இடைத்தேர்தலில் அதிகமான இந்தியர்கள் அன்வார் இப்ராஹிமிற்கு வாக்களித்தனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது இந்தியர்கள் அரசியல் மாற்றத்தை விரும்பியதை மிகத் தெளிவாக எடுத்து காட்டுகிறது. ஆனாலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருந்தாலும் மாற்றத்திற்காக வாக்களித்தவர்கள் இன்னும் தாங்கள் எதிர்பார்த்தது நடக்கவில்லை என்ற ஏக்கத்தோடு தான் இருக்கின்றனர் என்பதையும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சுட்டிக்காட்டினார்.
இந்த நாட்டில் மக்களுக்கான கொள்கைகளும் சலுகைகளும் இன வாரியாக பிரித்துக் கொடுக்கப்படுவதை காட்டிலும் தேவைக்கேற்ப வழங்குவதே சிறந்ததாக இருக்குமென தாம் பரிந்துரைப்பதாக அவர் குறிப்பிட்டார். இதனிடையே, போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தேர்தலில் தமக்கு பெருவாரியான இந்தியர்கள் வாக்களித்தார்கள் என்பதையும் நினைவுகூர விரும்புவதாகக் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

7 + three =