பக்காத்தான் ஆட்சிக்கு வந்தால் அன்வார்தான் அதனை வழி நடத்துவார்

0

எதிர்க்கட்சியாக இருக்கும் பக்காத்தான் ஹராப்பான் ஆட்சிக்கு வந்தால் அதனை பிகேஆரின் தலைவர் அன்வார் இப்ராஹிம் வழி நடத்தும் வாய்ப்பு இருக்கும் என்று வான் அஸிஸா வான் இஸ்மாயில் தெரிவித்தார்.
கடந்த மாதம் சதித் திட்டத்தின் மூலம் பக்காத்தான் ஆட்சி கவிழ்ந்தது. அது விரைவில் தனது கூட்டத்தை நடத்தவிருக்கிறது. அக்கூட்டத்தில், கூட்டணியை அன்வார் வழி நடத்த முடிவெடுக்கப்படும் என முன்னாள் துணைப் பிரதமர் வான் அஸிஸா தெரிவித்தார்.
பிரதமராகும் எண்ணத்தில், துன் மகாதீர் பிரதமர் பதவியிலிருந்து விலகுவார் என்று அன்வார் ஈராண்டுகள் காத்திருந்துள்ளார்.
அந்தப் பதவி விவகாரத்தில் முன்னுக்குப் பின் முரணாகப் பேசி, பதவியை மகாதீர் ஒப்படைப்பதில் காலம் தாழ்த்தியதால், கொல்லைப்புற வழியாக முஹிடின் புதிய கூட்டணியோடு ஆட்சியை அமைத்துப் பிரதமராகி இருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × 1 =