பக்காத்தானை விட மகாதீரிடம்தான் பாஸ் விசுவாசமாக இருக்கிறது

0

பிரதமரைக் கொண்டிருக்கும் பக்காத்தான் கூட்டணியை விட பாஸ் கட்சி, துன் மகாதீரிடம் மிகவும் விசுவாசமாக இருப்பதாகக் காட்டிக் கொண்டு வருவது நகைப்புக்கு உரியது என சைஃபுடின் நசுத்தியோன் குறிப்பிட்டார்.

பக்காத்தான் கூட்டணியின் ஆதரவில் அதனைப் பிரதிநிதித்து துன் மகாதீர் நாட்டின் பிரதமராக இருக்கும்போது, அவரிடம் மட்டுமே விசுவாசம் காட்டுவது சந்தேகத்துக்குரியதாக இருப்பதாக பிகேஆரின் தலைமைச் செயலாளர் சைஃபுடின் நசுத்தியோன் குற்றம் சாட்டினார்.

தேசிய முன்னணியின் ஊழல் ஆட்சியை எதிர்க்க பக்காத்தான் உறுப்புக் கட்சிகள் அனைத்தும் துன் மகாதீரின் பின்னால் அணிவகுத்து நின்ற போது, ஊழல் ஆட்சி செய்த நஜிப் ரசாக்கை முழுமையாக பாஸ் கட்சி ஆதரித்தது ஏன் என அவர் கேள்வி எழுப்பினார். பாஸ் கட்சியின் தலைமைச் செயலாளர் தக்கியுடின் ஹசான் அப்போது யார் பின்னால் நின்றிருந்தார்?

தமது உற்ற நண்பர் நஜிப்பின் ஆட்சி கவிழ்ந்த பின்னர், தனக் கென சலுகைகளைப் பெற பாஸ் கட்சி விழுந்து விழுந்து மகாதீரை ஆதரிப்பது நகைப்புக்குரியது என அவர் விமர்சித்தார்.
நேற்று முன்தினம், சைஃபுடின் நசுத்தியோன், மகாதீருக்குக் கீழ் படியாமல் செயல்படுவதாக தக்கியுடின் குற்றம் சாட்டியதை அடுத்து, அவர் இதனைத் தெரிவித்தார்.

2018ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்னர், பாஸ் கட்சி நஜிப் மற்றும் தேசிய முன்னணியோடு அணுக்க உறவில் இருந்தது குறிப்பிடத்தக்கது. நஜிப்பின் ஊழல் ஆட்சியின் காரணமாக 61 ஆண்டுகள் ஆட்சி நடத்திய தேசிய முன்னணி 2018ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் படுதோல்வியை அடைந்தது. பாஸ் கட்சி மகாதீருக்கு ஆதரவு தெரிவிப்பதில் தவறில்லை ஆனால், அதனை இதற்கு முன்னரே செய்திருக்க வேண்டுமென சைஃபுடின் நசுத்தியோன் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 + three =