பக்காத்தானுக்கு 129 எம்பிக்களின் ஆதரவு இன்னும் உறுதியாகவில்லை

பக்காத்தான் ஹராப்பானு க்கு 129 நாடாளுமன்ற உறுப்பி னர்களின் (எம்பிக்களின்) ஆதரவு உள்ளது என்பது இன்னும் உறுதியாகவில்லை என பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார். இருப்பினும் இந்த விவகாரம் குறித்து சுமுகமான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக அவர் சொன்னார். மத்திய அரசாங்கத்தைக் கைப்பற்ற முன்னாள் பிரதமர் துன் மகாதீருக்கு இன்னும் ஒரு சில எம்பிக்களின் தேவை இருப்பதாக வெளியாகியுள்ள செய்தி குறித்து போர்ட்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் விரிவாகக் கருத்துரைக்க வில்லை. நேற்று முன்தினம் நடந்த பிகேஆர் கூட்டத்தில் 129-130 எம்பிக்களின் எண்ணிக்கை குறித்து பேசப்படவில்லை என பக்காத்தான் ஹராப்பானின் தலைவருமான அவர் சொன்னார்.
நாட்டு நடப்பு மற்றும் கோவிட்-19 வைரஸ் தாக்கத்தை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றிதான் பிகேஆர் தலைமைத்துவக் கூட்டத்தில் பேசப்பட்டதாக அவர் தெரிவித்தார். பெரிக்காத்தான் நேஷனலிடமிருந்து மத்திய அரசாங்கத்தைக் கைப்பற்ற 129 எம்பிக்கள் துன் மகாதீர் வசம் இருப்பதாக சின் சியூ தினசரி நேற்று முன்தினம் செய்தி வெளியிட்டிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × four =