பக்காத்தானுக்கு ஏற்பட்டு வரும் சோதனைகளுக்கு மத்தியில் அன்வார் – கிட் சியாங் சந்திப்பு

0

கடந்த பொதுத்தேர்தலுக்கு முன்பு நாட்டின் ஆட்சியை பக்காத்தான் கைப்பற்றினால் ஒரு புதிய விடியல் ஏற்படும் என உறுதி கூறப்பட்டது. கிட்டதட்ட 16 மாதங்கள் கடந்த பின்னும் அந்த நம்பிக்கை கூட்டணி மீது மக்களுக்கு இன்னும் நம்பிக்கை வரவில்லை.
மலேசிய அரசியலில் தற்போது அதிகமான இன – சமய விவகாரங்கள் தலை தூக்கியிருக்கின்றன. இந்தச் சூழலில் 62ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படவிருக்கும் நேரத்தில் ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங் பிரதமர் மகாதீரையும் கெஅடிலான் தேசியத் தலைவர் அன்வார் இப்ராஹிமையும் சந்தித்திருக்கிறார்.
அன்வாருடனான சந்திப்பின்போது புத்தாக்க மலேசியா குறித்து இரு தலைவர்களும் விரிவாகப் பேசியதாக ஜொகூர் ஜசெக தலைவர் லியூ சின் தொங் கூறினார். தற்போது பல்வேறு காரணங்களால் பிளவுபட்டு விலகியிருக்கின்ற பலரை ஒன்றுபடுத்தும் வகையில் இருவரும் பேசினர். எனினும் தாம் பேசிய அந்த அம்சங்கள் குறித்து லிம் கிட் சியாங் வெளியிடவில்லை. இது ஒரு வழக்கமான சந்திப்பு. எப்போதும் போல் சில விஷயங்களை பிரதமர் உட்பட பலரிடம் நான் பேசி வருகிறேன் என்றார் லிம்.
கடந்த பொதுத்தேர்தலுக்குப் பிறகு ஜசெகவுக்கு எதிராக மலாய்க்காரர்கள் – முஸ்லிம்களுக்கிடையே எதிர்மறையான கருத்துகள் உருவெடுத்துள்ளன. குறிப்பாக அண்மையில் கல்வி அமைச்சு கொண்டு வந்த ஜாவி விவகாரமும் சர்ச்சைக்குரிய மதபோதகர் ஸக்கீர் விவகாரமும் மிக முக்கியமாக இருந்தன. மலாய்க்காரர்களின் நலனுக்கு விரோதமாக ஜசெக செயல்படுகிறது என்று அம்னோ – பாஸ் கூட்டணி குற்றஞ்சாட்டி வருகிறது. அதேபோல் முஸ்லிம் அல்லாதவர்களும் குறிப்பாக சீன சமுதாயத்திலும் ஜசெகவுக்கு எதிர்ப்பான ஒரு நிலை உருவாகி யிருக்கிறது. அதற்கு, சீன சமுதாயம் எங்கு கண்டாலும் மதித்துப் போற்றும் லிம் கிட் சியாங்கை ஒரு விருந்து நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ளக்கூடாது என்று அண்மையில் நடந்த கூச்சல், குழ்ப்பம் உதாரணமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here