பக்காத்தானிலிருந்து ஜசெக விலகினால் அம்னோ – பாஸ் ஆட்சிக்கு வரலாம்

0

பெட்டாலிங் ஜெயா , ஆக. 14-
பக்காத்தான் ஹராப்பான் ஆளும் கூட்டணியிலிருந்து ஜசெக விலகப் போவதாக வெளியாகியுள்ள தகவலை ஜொகூர் ஜசெக தலைவர் லியூ சின் தோங் மறுத்துள்ளார்.
தாய்மொழிப் பள்ளிகளில் அரேபிய எழுத்தோவியத்தை அறிமுகப்படுத்தும் விவகாரம் தொடர்பாக சீன சமூகத்திடையே ஆத்திரம் மூண்டுள்ளதை தாம் ஒப்புக் கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும், பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி அரசாங்கம் தொடர்ந்து நீடிக்க ஜசெக உறுப்பினர்கள் உறுதுணையாக இருக்க வேண்டுமென தற்காப்பு துணை அமைச்சருமான அவர் கேட்டுக்கொண்டார்.
கடந்த 2018 மே 9ஆம் தேதி நடந்த நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் ஜனநாயகம் வென்றுள்ளது. அதனை சீர்குலைக்க சில தரப்பினர் முயற்சித்து வருகின்றன.
அப்படி இந்த ஜனநாயகம் சீர்குலைந்தால் அம்னோ மற்றும் பாஸ் ஆட்சியில் அமர அதிக வாய்ப்புகள் உள்ளது.
தாய்மொழிப் பள்ளிகளில் அரேபிய எழுத்தோவியம் அறிமுகம் தொடர்பான விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும்.
இது போன்ற பேச்சுவார்த்தையின் வழி தான் இந்தப் பிரச்சினைக்கு ஒரு சுமுகமான தீர்வை நம்மால் காண முடியும் என லியூ நம்பிக்கை தெரிவித்தார்.
குறிப்பாக இந்த விவகாரத்தில் கல்வியமைச்சு சம்பந்தப்பட்ட தரப்பினருடன் நன்கு கலந்தாலோசிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × two =