பகடிவதை, துன்புறுத்தல் சம்பவங்களுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்

0

நாட்டில் ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கும் பகடி வதை மற்றும் துன்புறுத்தல் சம்பவங்களுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்று மலேசிய பகடிவதை- துன்புறுத்தல் துடைத்தொழிப்பு இயக்கத் தலைவர் டாக்டர் சுரேஷ் வீரசிங்கம் கேட்டுக் கொண்டார்.
தற்போது நாட்டில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவது பெரும் கவலையளிக்கிறது. மேலும் குடும்ப வன்முறை சம்பவங்களினால் பெண்களும் அதிகளவில் பாதிக்கப் பட்டுள்ளனர். இந்த சம்பவங்களில் பாதிக்கப்படுவோர் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை வெளியே சொல்வதற்கு பயப்படுகிறார்கள். ஆகவே, இதற்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதோடு பாதிக்கப்பட்ட மக்களும் காப்பாற்றப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
கடந்த வார இறுதியில் பேரா மாநில இளைஞர், விளையாட்டுத்துறை இயக்குநர் விஜயகுமாரை நேரில் சந்தித்து மஜகர் ஒன்றை வழங்கினோம்.
பகடிவதை சம்பவங்களில் அதிகளவில் இளைஞர்கள் ஈடுபடுவதால் இதற்கு முடிவு கட்ட வேண்டும். மேலும், பகடிவதை ஒரு குற்றச் செயலாகக் கருதப்படுகிறது. இதில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்பதை இளைஞர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
பகடிவதை ஒரு கொடூரச் சம்பவமாக விளங்குகிறது. இதில் இருந்து நமது இளைஞர்கள் ஒதுங்கியிருக்க வேண்டும் என்று இந்த சந்திப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டதாக அவர் சொன்னார்.
இதனிடையே, கோவிட் -19 நோய்த்தொற்று காலத்தில் அமல் படுத்தப்பட்ட மக்கள் நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை காலகட்டத்தில் நாட்டில் 190 குடும்ப வன்முறை சம்பவ புகார்கள் கிடைக்கப்பெற்றதாக குடும்ப, மகளிர், மேம்பாட்டுத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ரினா ஹருண் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியைத் தருகிறது என்றார் அவர். bஇந்த 190 குடும்ப வன்முறை சம்பவங்களில் 181 பெண்கள் பாதிக்கப்பட்ட வேளையில் 9 ஆண்களும் இதில் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eleven + 3 =