நோரா என்னின் பிரேத அறிக்கை விரைவில் கிடைக்கும்

0

சிரம்பானுக்கு அருகிலுள்ள ஒரு ரிசோர்ட்டில் இருந்து காணாமல் போய் 10 நாட்களுக்குப் பின்னர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட அயர்லாந்தைச் சேர்ந்த பதின்ம வயது பெண்ணான நோரா என்னி குவோய்ரினின் பிரேத பரிசோதனை அறிக்கை விரைவில் கிடைக்கும் என்று நெகிரி செம்பி லான் காவல் துறைத் தலைவர் டத்தோ முகமட் மாட் யூசோப் கூறினார். சட்டத்துறை அலுவலகத்தில் சமர்ப்பிப்பதற்கு பிரேத பரிசோதனை நிபுணர்கள் குழுவின் அறிக்கைக்காக காவல் துறையினர் காத்திருப்பதாக டத்தோ முகமட் தெரிவித்தார்.
சட்டத் துறை அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்ட முதல் கட்ட அறிக்கையின்படி ‘மேல் நடவடிக்கை எடுக்கப்படாது என்று இச்சம்பவம் வகைப்படுத்தப் பட்டுள்ளது.
2 வார கால விடுமுறையில் நோரா என்னியும் அவரது குடும்பத்தினரும் கடந்த ஆகஸ்ட் 3 ஆம் தேதி மலேசியாவிற்கு வந்தனர்.
பந்தாயிலுள்ள டூசுன் பந்தாய் ஹில் ரிசோர்ட்டில் தங்கியிருந்த நோரா என்னி ஆக.4 ஆம் தேதி காணாமல் போய் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
அவர் தங்கியிருந்த ரிசோர்ட்டிலிருந்து 2.5 கிலோ மீட்டருக்கு அப்பால் நிர்வாண நிலையில் அவரது சடலம் ஆகஸ்ட் 13 ஆம் தேதி கண்டு பிடிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty + nineteen =