நெடுஞ்சாலையோரம் புல் வெட்டும் குத்தகையாளர்கள் எங்கே?

0
dav

இந்த ஆண்டு துவக்கத்திலிருந்து கிள்ளானிலிருந்து பந்திங் நோக்கி செல்லும் நெடுஞ்சாலையில் வளர்ந்துள்ள புற்களையும், செடிகொடிகளையும் வெட்டி சுத்தம் செய்யும் துப்புரவுத் தொழிலாளர்கள் இல்லை. புல் வெட்டும் குத்தகையாளர்கள் எங்கே? என நெடுஞ்சாலை ஓரத்தை ஒட்டியுள்ள குடியிருப்பாளர்கள் புகார் கூறத் தொடங்கியுள்ளனர்.
கிள்ளான் தொடங்கி பந்திங் நோக்கிச் செல்லும் வழிநெடுகிலும் புல் வெட்டும் குத்தகையாளர்கள் இருக்கிறார்கள். அதனால் சாலையோரத்தில் சில இடங்களில் புல் வெட்டியும் சுத்தம் செய்தும் வருகின்றார்கள். ஆனால், இப்போது கடந்த சில மாதங்களாக டுசுகூ 3 மேம்பாலம் கட்டும் பணி நடப்பதால் சாலையோரம் புதர் மண்டிக்கிடக்கின்றது. பொதுப்பணியாளர்களும் அதிகாரிகளும் இதைக் கண்டு கொள்வதில்லை.
இப்போதுதான் இது மக்கள் அரசாங்கம் என்கிறார்களே. எதுவும் மக்களுக்காக நடப்பதாக தெரியவில்லை என வாகன ஓட்டிகளும் சொல்லத் தொடங்கி விட்டார்கள்.
கிள்ளான் தெங்கு ரஹிமா மருத்துவ மனையில் எதிர்ப் புறத்தில், பந்திங் நோக்கிச் செல்லும் வழியில் நோயாளிகள், பயணிகள் பேருந்துக்காக காத்திருக்கும் இடத்திலும் சுத்தம் இல்லை. பயணிகளுக்கான பஸ் டோப் எதுவுமில்லை. இப்போது பொதுவாக கிள்ளானிலிருந்து பந்திங் நோக்கி செல்லும் சாலையில் துப்புரவுப் பணிகள் அறவே நடப்பதில்லை. மேலும் சாலையில் குண்டும் குழிகளும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகின்றன.
மோட்டார் பயணிகள் ஆபத்துக்குள் ளாகி மரணித்தும் உள்ளார்கள். இதையெல்லாம் யாரிடத்தில் சொல்வதென்று பலரும் வேதனையுடன் கூறிச்செல்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 − five =