நெகிழி பயன்பாட்டை அரசாங்கம் தடைசெய்ய வேண்டும்

0

நாடு முழுவதும் நெகிழி பயன்பாட்டை அரசாங்கம் உடனே தடைசெய்ய வேண்டும் என பிகேஆர் திராம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கோபாலகிருஷ்ணன் வலியுறுத்தினார்.
நெகிழி தயாரிப்புகளைப் பயன்படுத்துவதால் பல பாதிப்புகள் ஏற்படுவதாக நேற்று முன்தினம் ஜொகூர் மாநில சட்டமன்றக் கூட்டத்தில் அவர் குறிப்பிட்டார். நெகிழி தயாரிப்புகளைப் பயன்படுத்துவதால் உடலில் பலவிதமான நோய்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக இதன் பயன்பாட்டால் புற்றுநோய் பரவும் சாத்தியம் இருப்பதாக அவர் சொன்னார். குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் நெகிழி தயாரிப்புகளைப் பயன்படுத்துவதால், குழந்தைகளின் உடலுறுப்புகள் பாதிக்கப்படுகின்றன.
நெகிழி பொருட்களைப் பயன்படுத்தினால், அதன் விளைவுகள் 40 வருடங்களுக்குப் பின்பே நமக்குத் தெரிய வருகிறது.
உலகம் முழுவதும் தயாரிக்கப்படும் நெகிழிப் பொருட்களில் 10 விழுக்காடு கடலில் போய்ச்சேருகின்றன. இந்த நெகிழிப் பொருட்களை கடலில் உள்ள மீன்கள் உட்கொள்கின்றன. அந்த மீன்களை நாம் உட்கொள்ளும் போது நமக்கே அது தீங்காக அமைகிறது என அவர் சொன்னார்.
உலகில் பல நாடுகள் இப்போது நெகிழிப் பொருட்களின் பயன்பாட்டை முற்றாக நிறுத்திவிட்டன. ஆகையால் கால தாமதமின்றி மலேசியாவும் இதனைப் பின்பற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

12 − five =