நெகிரி செம்பிலான் மாநில பிகேஆர் கட்சியின் தகவல் மையம் உருவானது

0

கடந்த சனிக்கிழமை தாமான் கெமுனிங், செனாவாங்கில் நெகிரி செம்பிலான் மாநில பி. கே. ஆரின் தகவல் மையத்தை அதன் தேசியத் தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமினால் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
இதன் மூலம் இனிமேல் கட்சி உறுப்பினர்கள் தங்களுக்குத் தேவையான தகவல்களை இங்கு பெற்றுக் கொள்ளலாம். திறப்புரை ஆற்றுகையில், கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் கட்சி மற்றும் நாட்டு நடப்பு நிலவரங்களை மற்றும் தகவல் களை அவசியம் தெரிந்து வைத் திருக்க வேண்டும். அதோடு நம் கட்சியின் நன்மைக்காக போராட்டங்கள் மேலும் தீவிரமடைந்து வலுவடைய வேண்டும் என்று போர்ட்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் கூறினார். நாட்டின் 8ஆவது பிரதமராக தாம் நியமனம் பெற்ற பிறகு பல வாக்குறுதிகளை நிறைவேற்றப் போவதாகவும் தெரிவித்தார்.
இதற்கு முன்னதாகப் பேசிய மாநில மந்திரிபெசார் மாநில அளவில் தாம் மேற்கொள்ளும் மக்கள் நலத் திட்டங்களைப் பற்றி நிறைய பேசினார். இறுதியாக செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
இந்நிகழ்வில் நெகிரி மாநில சட்டமன்ற துணை சபாநாயகரும் போர்ட்டிக்சன் ஸ்ரீ தஞ்சோங் சட்டமன்ற உறுப்பினருமான டத்தோ ரவி முனுசாமி, நெகிரி மாநில அரசு ஆட்சிக் குழு உறுப்பினர்களும் மற்றும் பி. கே. ஆர். கட்சி உறுப்பினர்களும் சுமார் 500 பேர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 − two =