நெகிரி செம்பிலானிலும் சிலாங்கூரிலும் அடுத்த ஆட்சி கவிழ்ப்பு

சபாவில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை அடுத்து நெகிரி செம்பிலான், சிலாங்கூர் மாநிலங்களிலும் நடக்கக்கூடும் என அமானா இளைஞர் பிரிவுத் தலைவர் ஷாஸ்னி முனிர் முகமட் இஸ்னின் கூறினார்.சபாவில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அந்தத் துரோகிகள் நிச்சயமாக அமைதியுடன் இருக்க மாட்டார்கள் என்றார் அவர்.ஆகையால் அந்தத் துரோகிகள் பக்காத்தான் ஹராப்பான் தலைமையிலான நெகிரி செம்பிலான், சிலாங்கூர் மாநிலங்களிலும் தங்களுடைய சதித் திட்டத்தை மேற்கொள்ளக் கூடும் என அவர் எச்சரித்தார். கொல்லைப்புற வழியில் மாநில அரசாங்கங்களைக் கைப்பற்றும் முயற்சியில் அந்தத் துரோகிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருவதாக அவர் சுட்டிக் காட்டினார். இந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தைச் சேர்ந்த முக்கிய புள்ளிகளுக்கும் தொடர்பு இருப்பதாக அவர் சாடினார்.

அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் கவனம் செலுத்துவதை விட மக்களின் நலன்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதில் இந்தத் துரோகிகள் அக்கறை செலுத்த வேண்டும் என்றார் அவர்.
கோவிட்-19 தாக்கத்தால் மக்கள் எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடியை சமாளிப்பது எப்படி என்பதில் இந்தத் தரப்பினர் கவனம் செலுத்த வேண்டும் என அவர் சொன்னார்.
சபா சட்டமன்றக் கலைப்பை அதன் முதலமைச்சர் ஷாபி அப்டால் நேற்று முன்தினம் அறிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × 1 =