நீர்த்தடை ஏற்பட்டால் ஆயர் சிலாங்கூரை தொடர்பு கொள்ளலாம்

செப்டம்பர் 15 ஆம் தேதி கே.எல்.ஐ.ஏ மசூதிக்கு அருகிலுள்ள பண்டார் ஸ்ரீ எஹ்சானில் பழுதடைந்த நீர்க்குழாய் காரணமாக சிப்பாங், கோல லங்காட்டில் ஒன்பது பகுதிகளில் திட்டமிடப்படாத நீர் வழங்கல் தடங்கல் ஏற்பட்டிருந்தது.
பெங்குருசான் ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் தலைவர் எலினா பாசெரி ஓர் அறிக்கையில், திட்டமிடப்படாத நீர் வழங்கல் தடங்கலின்போது பயனீட்டாளர்கள் பொறுமையாக இருந்ததற்கு நன்றி தெரிவித்தார்.
சமீபத்திய நீர் வழங்கல் தகவல்களுக்கு ஆயர் சிலாங்கூர் ஸ்மார்ட்போன் பயன்பாட்டை ‘கூகுள் பிளே’ அல்லது ‘ஆப் ஸ்டோரில்’ பதிவிறக்கம் செய்யுமாறு அந்த அறிக்கை பயனீட்டாளர்களுக்கு அறிவுறுத்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

10 + fourteen =