நீதி நிலைநாட்டப்பட்டது! பக்காத்தான் தலைவர்கள் பெருமிதம்

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் எஸ்ஆர்சி வழக்குகளில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டாதை அடுத்து, நீதி நிலைநாட்டப்பட்டதாக பக்காத்தான் தலைவர்கள் தங்களின் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டனர்.
2018ஆம் ஆண்டு பக்காத்தான் ஹராப்பானுக்கு மக்கள் வாக்களித்தது போன்று, நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்திருப்பதாக எரிபொருள், அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், பருவகால மாற்றம் துறை யின் முன்னாள் அமைச்சர் இயோ பீ யின் தெரிவித்தார்.
2018ஆம் ஆண்டு ஊழலுக்கு எதிராக வாக்களித்த மக்களுக்கு இது உவகை தரும் தீர்ப்பு என்று அவர் விமர்சித்தார்.
பிகேஆரின் உதவித் தலைவர் ரஃபிஸி ரம்லி, நேற்று நஜிப் குற்றவாளி என்று அறிவித்ததன் மூலம் நீதிமன்றம் வரலாற்றுப்பூர்வ தீர்ப்பினை வழங்கியதாகப் புகழாரம் சூட்டினார்.
1எம்டிபி வழக்கில் நஜிப்பிற்கு எதிராகக் கடும் குரல் கொடுத்து, நீதி வழங்கப்பட வேண்டுமென்று அறைகூவல் விடுத்தோரில் ரஃபிஸி மிகவும் முக்கியமானவர்.
பல காலமாக தமது உழைப்புக்குத் தகுந்த பரிசு கிடைத்துள்ளதாக அவர் பெருமிதம் கொண்டார்.
பிகேஆரின் அமைப்புச் செயலாளர் நிக் நஸ்மி நிக் அமாட், நஜிப்பின் மீது சுமத்தப்பட்ட 7 குற்றச்சாட்டுகளிலும் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது,
நீதி நிலை நாட்டப்பட்டதாக எடுத்துக் கொள்ளப்படும் என்று குறிப்பிட்டார்.
1எம்டிபி முறைகேடலினால் நாட்டின் பொருளாதாரம் சீரழிந்ததற்கு நல்ல தீர்ப்பு கிடைத்துள்ளது என்றும் இது ஊழலை ஒழிக்கத் துணை நின்ற அனைவருக்குமான சிறந்ததொரு பரிசு என்றும் அவர் குறிப்பிட்டார்.
1 எம்டிபியிடமிருந்து கொள்ளை யடிக்கப்பட்ட பணம் எங்கிருந்தாலும் அதனைக் கொண்டுவர அமலாக்கத் தரப்பு கடுமையாக உழைக்க வேண்டுமென்று அவர் கேட்டுக் கொண்டார்.
இது ஊழல் செய்தோரை தண்டிக்கும் முதல் கட்டம்தான் என்றும் அது இன்னும் தொடரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 − three =