நீதிமன்றத்தில் கண்ணீர் வெள்ளம்

0

அய்யோ… என் மகனை இந்தக் கோலத்தில் பார்ப்பதற்கா நான் இன்னும் உயிரோடு இருக்கிறேனா”
தவறே செய்யாதவர்களை இப்படி தண்டிக்கலாமா”
என் கணவரை கைது செய்து இன்றோடு 1 மாதம் ஆகப் போகிறது”
எந்தக் குற்றமும் செய்யாதவர்களை தீவிரவாதிகளைப் போல் கைவிலங்கிட்டு மொட்டையடித்து இழுத்து வருகிறார்களே”
இப்படித்தான் நேற்று கோலாலம்பூர், ஜாலான் டூத்தா நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்த, சொஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தங்களின் மன ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தனர்.


கிட்டத்தட்ட நூற்றுக்கணக்கான குடும்ப உறுப்பினர்கள் ஜாலான் டூத்தா உயர்நீதிமன்ற வளாகத்தில் ஒன்றுகூடியிருந்தனர். இவர்கள் அனைவரும் கடந்த 28 நாட்களுக்கு முன்னதாக கைது செய்யப்பட்ட தங்களின் குடும்ப உறுப்பினரை நேரடியாக பார்ப்பதற்காக அங்கு கூடியிருந்தனர்.
தங்களது குடும்ப உறுப்பினர்களை கைவிலங்கிட்டு சங்கிலியால் இணைத்து நீதிமன்றத்திற்கு கொண்டு வரும் காட்சியைப் பார்த்த அவர்கள் மனமுடைந்து, நொந்துப் போய், சோகத்தின் உச்சத்திற்கே சென்றுவிட்டனர்.
பலர் அந்த நீதிமன்ற வளாகத்திலேயே தங்களின் மன ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two + two =