நீதிபதியும் அரசு வழக்கறிஞர்களும் புதிய வரலாற்றைப் படைத்துள்ளனர்

எஸ்ஆர்சியின் 42 மில்லியன் ரிங்கிட் முறைகேடு வழக்கில் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் குற்றவாளி என்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து வரலாற்றில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தியது.
இந்தத் தீர்ப்பில், வழக்கை செவிமடுத்த நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கஸாலியும் அரசின் வழக்கறிஞர் வி.சிதம்பரமும் அந்தப் புதிய வரலாற்றில் முக்கிய இடம் பெறுவது என்பது திண்ணம்.
பிப்ரவரி மாதம் ஆட்சி மாறி பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சியில் அம்னோ உறுப்பியம் பெற்ற பின்னர், நஜிப்பின் வழக்கில் அரசின் தலையீடு இருக்குமென்றும் அதன் காரணமாக நஜிப் விடுவிக்கப்படுவார் என்றும் பரவலாகப் பேசப்பட்டது.
இவ்வாண்டு மே மாதம், நஜிப்பின் வழக்கறிஞர் முகமட் ஷாபி அப்துல்லா கூறும்போது, தம்மீதான களங்கத்தைத் துடைக்க, வழக்குகள் ரத்தாவதை நஜிப் விரும்பவில்லை என்றும், அவற்றை எதிர்கொண்டு தாம் குற்றமற்றவர் என்று நிரூபிக்கவே விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.
எஸ்ஆர்சியின் 42 மில்லியன் முறைகேட்டின் 7 குற்றச்சாட்டுகளில் நஜிப் குற்றமிழைத்ததாக அறிவித்த நீதிபதி, வர்த்தகர்
ஜோ லோவினால் தாம் ஏமாற்றப்பட்டதாகக் கூறியதை ஏற்பதற்கில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
நஜிப்பின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்ட 42 மில்லியன் ரிங்கிட்டானது சவூதி மன்னர் குடும்பத்தின் நன்கொடை என்று கூறியதற்கு ஆதாரம் இல்லை. மேலும் சவூதி மன்னர் எழுதியதாகச் சொல்லப்படும் கடிதத்தின் உண்மைத் தன்மையை அவர் ஆராய்ந்திருக்க வேண்டும். மேலும், நன்கொடை அளித்த மன்னருக்கு நஜிப் எந்தவொரு நன்றி கடிதத்தையும் அனுப்பவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது என்று சுட்டிக்காட்டியுள்ளார். அது நன்கொடை என்று சொல்லப்படுவதை ஏற்றுக் கொள்வதற்கில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
51 வயதான நீதிபதி நஸ்லான், கோல கங்சார் மலாய் கல்லூரி மாணவராவார். நீதித் துறையில் இளங்கலைப் பட்டமும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டத்தோடு லண்டன்
லிங்கன்’ஸ் இன்னில் சட்டத் துறைப் பட்டத்தையும் பெற்றுள்ளார்.
ஸைட் இப்ராஹிம் நிறுவனத்தில் 5 ஆண்டு காலம் பணியாற்றிய நஸ்லான், பங்குச் சந்தை ஆணையத்தில் தலைவராகி, பின்னர்
மேபேங்கில்
சட்ட ஆலோசகராகப் பணியாற்றினார். அங்கு உதவித் தலைவராகப் பணியாற்றிய பின்னர், நீதித் துறையில் நியமிக்கப்பட்டார். நஜிப்பின் வாக்குமூலத்தைப் பெற்ற உயர்நீதிமன்ற
நீதிபதி சோஃபியன் அப்துல் ரசாக் 2018 ஜூலையில் அதிலிருந்து விலகிக் கொண்டதால், நஸ்லானிடம் அந்த வழக்கை நடத்தும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.
நஜிப் ரசாக் அம்னோவின் முன்னாள் பிரதமராவார். பெக்கான் நாடாளுமன்ற உறுப்பினராகவும் அவர் பதவி வகித்து வருகிறார்.
இவ்வழக்கை நடத்திய வழக்கறிஞர் சிதம்பரம், முன்னாள் சட்டத்துறைத் தலைவர் டோமி தோமஸினால் நியமிக்கப்பட்டவராவார்.
பினாங்கைச் சேர்ந்த அவர் 2004ஆம் ஆண்டு நொரித்தா சம்சுடின்
கொலை வழக்கில் குற்ற
சாட்டப்பட்டு விடுதலையான பஸ்ரீ அப்துல் ரஹ்மான் சார்பில் ஆஜரானவர்.
இதனிடையே டோமி தோமஸின் கருத்தினை அறிய தொடர்பு கொண்ட போது, இச்சமயத்தில் தாம் கருத்து சொல்வது நல்லதல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × 3 =