நீங்க டயட்டில் இருக்கீங்களா? அப்ப இந்த உணவை சாப்பிடலாம்

டயட்டில் இருப்பவர்கள் காலையில் புத்துணர்ச்சியுடன், சுறுசுறுப்பாக வேலை செய்ய வேண்டுமா? இப்ப இந்த உணவை சாப்பிடலாம். உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. நீண்ட நேரம் பசி எடுக்காது.
தேவையான பொருட்கள் :
கோதுமை பிரெட் – 4 துண்டுகள்
முட்டை – 3
பெ.வெங்காயம் – 1
மிளகுத் தூள், சீரகம் – கால் டீஸ்பூன்
உப்பு – தேவைக்கு
கடுகு, உளுந்தம் பருப்பு – சிறிதளவு
பச்சை மிளகாய் – 2
பெருங்காயத்தூள் – சிறிதளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை – சிறிதளவு
எண்ணெய் – தேவைக்கு

செய்முறை:

  • வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • கோதுமை பிரெட்டை துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, சீரகம், மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போன்றவற்றை போட்டு தாளிக்கவும்.
  • பின்னர் வெங்காயத்தை கொட்டி பொன்னிறமாக வதக்கவும். நன்கு வதங்கியதும் முட்டையை உடைத்து ஊற்றி கிளறவும்.
  • அதனுடன் மிளகுத்தூள், உப்பு தூவவும்.
  • முட்டைஉதிரியாக வந்ததும் பிரெட்டு துண்டுகளை போட்டு கிளறவும்.
  • உப்புமா பதத்துக்கு வந்ததும் கொத்தமல்லி தழையை தூவி இறக்கி பரிமாறலாம்.
  • சூப்பரான கோதுமை பிரட் முட்டை உப்புமா ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

6 + six =