நீங்கள் ஆணா? பெண்ணா?

0

நீங்கள் ஆணா பெண்ணா என்று எனக்குத் தெரியவில்லை என மக்களவையில் முன்னாள் அமைச்சர் அஸாலினா ஒஸ்மானை பார்த்து பிரதமர் துறை துணையமைச்சர் ஹனிபா மைடின் கூறியதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.

அவையில் கடுமையான ஆட்சேபம் எழுந்ததால் தாம் சொன்ன வார்த்தைக்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாக ஹனிபா தெரிவித்தார்.

நேற்று பொய்ச்செய்தி தடுப்புச் சட்டத்தை ரத்து செய்வது மீதான மசோதா பற்றிய விவாதத்தின் போது அஸாலினாவைப் பார்த்து நகைச்சுவையாகப் பேசுவதாக நினைத்து ஹனிபா மைடின் பேசியதுபெரும் புயலை ஏற்படுத்தியது.

இப்படி துணை அமைச்சர் கூறியபோது பதிலளிப்பதற்காக தமது மூக்குக் கண்ணாடியைத் தேடிக்கொண்டிருந்தார் அஸாலினா. நான் என் கண்ணாடியை அணிந்து கொள்ள விரும்புகிறேன். உங்களை நன்கு பார்க்க விரும்புகிறேன்.

சில வேளைகளில் நீங்கள் பெரிய உருவமாகக் காட்சியளிக்கிறீர்கள். சில வேளைகளிலோ மிகவும் அற்பமாகக் காட்சியளிக்கிறீர்கள் என்று அஸாலினா பதிலளித்தார்.

துணை அமைச்சர் ஹனிபா சொன்ன வார்த்தை மிகக் கடுமையானது என்று கூறி எதிர்க்கட்சி எம்பிக்கள் கடுமையான ஆட்சேபத்தில் இறங்கினார். சொன்னதை மீட்டுக்கொள்ளுங்கள் என்று அஸாலினா கூறியபோது, தாம் தவறாகப் பேசியதற்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாக அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 + nineteen =