நிலப்பட்டாவுக்காக 50 ஆண்டுகள் காத்திருக்கும் கிரியான் சிம்பாங் லீமாவின் 80 இந்திய குடும்பங்கள்

0

கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக, கிரியான் மாவட்டத்திலுள்ள சிம்பாங் லீமா,கம்போங் யாவ் செங் என்ற இடத்தில் வசித்து வந்த சுமார் 80 குடும்பங்கள், தங்களுக்கு தனிநிலப்பட்டா கிடைக்க வேண்டுமென்ற முயற்சியில் இறங்கியுள்ளனர்.
சுமார் 10 ஏக்கர் நிலத்தில் 159 லோட்டுகள் போடப்பட்டுள்ளன. ஆனால் அனைத்து லோட்டுகளுக்கும் மூன்று நிலப்பட்டாக்கள் மட்டுமே உள்ளது.இதனால் இங்கு வீடுகளைக் கட்டிக் கொண்டு வசித்து வரும் நூறு விழுக்காடு இந்தியக் குடும்பங்கள் எங்களுக்கு தனித்தனி நிலப்பட்டா கிடைக்க வேண்டுமெனக் கோரி பாகான் செராய் தொகுதி மஇகாவின் முன்னாள் தலைவர் ஆர்.பி.ஜெயகோபாலனின் உதவியை நாடியுள்ளனர்.
இதன் முதல் நடவடிக்கையாக சீனரான நில உரிமையாளரை சந்திப்பது, நில அளவையாளரை கொண்டு வருவது,கிரியான் மாவட்ட நிலம் மற்றும் மாவட்ட அலுவலகத்திடமும், பேரா மாநில நில அலுவலகத்திடமும் விண்ணம் செய்ய வேண்டியப் பணிகளை மேற்கொள்ளப் போவதாக ஆர்.பி.ஜெயகோபாலன் தெரிவித்தார்.
இங்கு வசிக்கும் குடும்பங்களின் ஒத்துழைப்போடு, இந்த தனி நிலைப்பட்டாவை பெற்றுத் தருவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுப்பேன் என, சம்பந்தப்பட்ட சில குடும்பங்களை சந்தித்தப் பின்னர் அவர் கூறினார்.
இதே போன்று கடந்த 30 ஆண்டுகளாக தனி நிலப்பட்டா கேட்டு பல்வேறு போராட்டங்களை எதிர்நோக்கி வந்த தைப்பிங் கம்போங் டியூவைச் சேர்ந்த 35 இந்தியக் குடும்பங்களுக்கு, ஆர்.பி.ஜெயகோபாலன் தனி நிலப்பட்டாவை பெற்றுத் தந்து உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 − two =