நிலச் சரிவில் இரு கார்கள் இழுத்துச் செல்லப்பட்டன

0

கடுமையான தொடர் மழையினால் கூலாய், சேலெங், தாமான் செந்தோசாவில் ஜாலான் சுத்ரா 8/1 எனுமிடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. மாலை 4.49 மணிக்கு ஏற்பட்ட அச்சம்பவத்தில் உயிருடற் சேதம் எதுவும் ஏற்படவில்லை. எனினும், இரு வாகனங்கள் சேற்றில் இழுத்துச் செல்லப்பட்டதாக கூலாய் தீயணைப்பு, மீட்புக் குழுத் தலைவர் முகமட் ஹைத்திமி அகமட் தெரிவித்தார். சேற்றில் சிக்கிக் கொண்ட அந்த இரு கார்களும் பாதுகாப்பான இடத்துக்கு அப்புறப்படுத்தப்பட்டன. இரவு 9 மணியளவில் கூலாய் நகரில் இரு துயர் துடைப்பு மையங்கள் திறக்கப்பட்டு, 36 குடும்பங்களைச் சேர்ந்த 113 பேர் தங்க வைக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 − 1 =