நிறைய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்! -எம்.டி.யூ.சி.

மாநில எல்லைப் பகுதியைக் கடக்கக் கடந்த திங்கள்கிழமை அரசு அளித்த அனுமதி நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் துரிதப்படுத்துவது மட்டுமின்றி அதிகமான வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும் என்று மலேசியத் தொழிற்சங்க காங்கிரசின் (எம்.டி.யூ.சி.) இடைக்காலத் தலைவர், முகமட் எஃபெண்டி அப்துல் கானி தெரிவித்தார். நாட்டின் பொருளாதாரத் துறைகளைச் சமசீராக்குவதில் இந்த முடிவு துல்லியமான ஓர் அணுகுமுறையாகக் கருதப்படுகிறது. இதற்கு முன் சிறு-நடுத்தரத் தொழில்துறைகளில் வேலை செய்த ஏராளமானோருக்குத் தற்போது வேலையில்லாமல் உள்ளது. இந்த மாநில எல்லை அல்லது நாட்டின் எல்லையைக் கடக்கும் அனுமதி வழங்கப்பட்டதன் மூலம் தொழிலாளர்கள் மற்றும் முதலாளிமார்களின் பொருளாதாரம் மீண்டும் புத்துயிர் பெறும் என்று பத்திரிகையாளர்களிடம் முகமட் எஃபெண்டி அப்துல் கானி குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × 4 =